பிக்பாஸ் சீசன் 8-ல் மல்லுக்கட்ட போகும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? லீக்கான லிஸ்ட் இதோ

First Published | Sep 20, 2024, 11:31 AM IST

BiggBoss Tamil Season 8 Contestants : விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுப்பாளராக களமிறங்கி உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் லிஸ்ட் கசிந்துள்ளது.

BiggBoss Tamil Season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறை சினிமா பணிகள் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். அவர் அந்நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை காண ஒருபுறம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

BiggBoss Vijay Sethupathi

மறுபுறம் இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதன்படி அந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 15 போட்டியாளர்கள் பற்றிய விவரம் கசிந்துள்ளது. அதன்படி மொத்தம் 9 ஆண் போட்டியாளர்களும், 6 பெண் போட்டியாளர்களும் இந்த பிக்பாஸ் சீசன் 8 ந் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... வம்பிழுத்த சுசித்ராவை வச்சு செய்த வைரமுத்து - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!!

Tap to resize

BiggBoss Tamil Season 8 male Contestants

ஆண் போட்டியாளர்கள்

பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் ஆகியோரது பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளன. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்த அருண், சீரியல் நடிகர் அர்னவ், நகைச்சுவை நடிகர் செந்திலின் பெயரும் அடிபடுகிறது. இறுதியாக பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான், நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தொகுப்பாளரும் நடிகருமான ஜெகன் ஆகியோரது பெயர்களும் லீக்கான லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளன.

BiggBoss Tamil Season 8 Female Contestants

பெண் போட்டியாளர்கள்

பெண் போட்டியாளர்களை பொறுத்தவரை செல்லம்மா சீரியலில் நாயகியாக நடித்த அன்ஷிதா பிக்பாஸில் கலந்துகொள்ள உள்ளாராம். இவரோடு ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி பவித்ரா ஜனனி, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லை ஃபரீனா, சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். இவர்களுடன் முந்தைய பிக்பாஸ் சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் சிலரும் இந்தமுறை கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் 2 பேவரைட் சீரியல்கள்! ரசிகர்கள் கவலை

Latest Videos

click me!