வம்பிழுத்த சுசித்ராவை வச்சு செய்த வைரமுத்து - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!!

Published : Sep 20, 2024, 10:29 AM IST

Vairamuthu vs Suchitra : வைரமுத்து தன்னை வீட்டுக்கு தனியாக வரச்சொன்னதாகவும் போன் பண்ணி பண்ணை வீட்டுக்கு அழைத்ததாகவும் பாடகி சுசித்ரா கூறி இருந்தார்.

PREV
14
வம்பிழுத்த சுசித்ராவை வச்சு செய்த வைரமுத்து - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!!
suchitra, Vairamuthu

மலையாள திரையுலகில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் பல்வேறு முன்னணி நடிகர்கள் செய்த பாலியல் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதேபோல் தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய அடுக்கடுக்கான புகார்கள் கோலிவுட்டில் புயலை கிளப்பியது.

24
Singer Suchitra

மே மாசம் 98-ல் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தன்னிடம் போன் செய்து உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்றெல்லாம கூறியதாகவும், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று தன்னை வீட்டுக்கு அழைத்ததாக கூறிய சுசித்ரா, தான் பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று சொன்னார். பின்னர் ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்ன பரிசு அது என கேட்ட சுசித்ராவிடம் வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்துவந்து கொடுத்தாராம் வைரமுத்து.

34
vairamuthu

பின்னர் ஒருமுறை பாடல் தொடர்பாக விவாதிக்க தன்னை அவரது பண்ணைவிட்டுக்கு வைரமுத்து அழைத்ததாக கூறிய சுசித்ரா, தனக்கு போன் பண்ணி தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி எல்லாப் பாடகிகளுக்கும் அவர் இதுபோன்று தொல்லை கொடுப்பார் என்றும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் பாடகி சுசித்ரா. அவரின் இந்த பேட்டி வைரலானதை தொடர்ந்து வைரமுத்துவை பலரும் இணையத்தில் விமர்சிக்க தொடங்கினர்.

இதையும் படியுங்கள்... ஹீரோஸ் நீங்க கொஞ்சம் ஓரமா போங்க.. நெட் ஒர்தில் நாயகர்களை மிஞ்சிய டாப் 4 வில்லன் நடிகர்கள்!

44
vairamuthu Befitting Reply for Singer suchitra

இந்நிலையில், சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார் வைரமுத்து. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வாழ்வியல் தோல்விகளாலும், பலவீனமான இதயத்தாலும், நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர், பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர். 

தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர். இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள். உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து. அவர் இதில் சுசித்ராவின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அவரை தாக்கி தான் இந்த பதிவை போட்டிருக்கிறார் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் 2 பேவரைட் சீரியல்கள்! ரசிகர்கள் கவலை

click me!

Recommended Stories