ஒரே ட்யூனில் 2 பாட்டு போட்ட இளையராஜா... ரெண்டுமே வேறலெவல் ஹிட்! அது என்ன பாடல்கள்?

Ilaiyaraja same tune songs : இசைஞானி இளையராஜா ஒரே ட்யூனை இரண்டு பாடல்களில் பயன்படுத்தி அந்த 2 பாட்டையும் ஹிட்டாக்கிய சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ilaiyaraja

இசையையும் இளையராஜாவையும் பிரிக்கவே முடியாது. ஏனெனில் இசைக்கு அவரின் அர்ப்பணிப்பு அலாதியானது. நாம் சந்தோஷமாகவோ அல்லது சோகமாக இருந்தாலும் அவரின் பாட்டு தான் கேட்போம். அதேபோல் காதலித்தாலும், பிரேக் அப் ஆனாலும் இளையராஜா பாடல்கள் தான். ஏன் மழை பெய்தாலும் அவரின் பாடல்கள் தான் கேட்க தூண்டும். அந்த அளவுக்கு இசை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இளையராஜா.

ilaiyaraja Same tune Songs

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொடுத்திருக்கிறார். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கும் இவர் வாங்கிய விருதுகள் எண்ணில் அடங்காதவை. பலரால் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு பல சாதனைகளை செய்த ஒரு அசாத்திய கலைஞர் தான் இளையராஜா. அவரின் இசையில் வெளிவந்த பாடல் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்திருக்காங்க... அதுவும் இத்தனை தமிழ் நடிகைகளுக்கா!!


Asaiya kathula Song

ஒரே ட்யூனில் இரண்டு ஹிட் பாடல்களை கொடுக்க முடியும் என நிகழ்த்தி காட்டி இருக்கிறார் இளையராஜா. அவர் 1980-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜானி படத்திற்காக இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. அதில் ஒரு பாடல் மட்டும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அது தான் ஆசைய காத்துல தூதுவிட்டு பாடல். இப்பாடலை எஸ்.பி.ஷைலஜா பாடி இருப்பார். இந்த பாடலுக்கு வைப் ஆகாத ஆளே இருக்க முடியாது. 

vasanthame varuga Movie song

அந்த அளவு பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இந்த பாடலின் ட்யூனை தான் இசைஞானி இளையராஜா அப்படியே இன்னொரு படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அதன்படி கடந்த 1983-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சுமன், கெளதமி, ரகுவரன் நடிப்பில் வெளியான வசந்தமே வருக திரைப்படத்தில் இடம்பெறும் ‘ராத்திரி உனக்கென ஆடட்டுமா’ என்கிற பாடலில் தான் இந்த ட்யூனை பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. இந்த படம் பெரியளவில் ஹிட்டாகாவிட்டாலும் இந்தப்பாடல் மட்டும் வைரல் ஹிட் அடித்தது. 

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8-ல் மல்லுக்கட்ட போகும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? லீக்கான லிஸ்ட் இதோ

Latest Videos

click me!