Sangeeth Sivan Death: பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்... இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்!

First Published May 8, 2024, 11:23 PM IST

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரரும், மலையாள பட இயக்குனருமான சங்கீத் சிவன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சங்கீத் சிவன், 1959 ஆம் ஆண்டு பிரபல ஸ்டில் புகைப்படக் கலைஞரும், ஒளிப்பதிவாளருமான சிவனுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். எம்ஜி கல்லூரி மற்றும் மார் இவானியோஸ் கல்லூரிகளில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, தனது தந்தையுடன் ஆவணப்படங்களில் பணியாற்ற துவங்கினார். இதுவே இவர் இயக்குனராக மாறுவதற்கான தூண்டுதலாக அமைந்தது.
 

Sangeeth Sivan

சங்கீத் சிவனுக்கு ஆரம்ப காலத்தில், தலைசிறந்த விஷயங்களை ஆவணப்படமாக மாற்றுவதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. யுனிசெஃப் மற்றும் திரைப்படப் பிரிவுக்காக பல ஆவணப்படங்களைத் இவர் இயக்கினார். பின்னர் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் இவரின் சகோதரர் சந்தோஷ் சிவனின் தூண்டுதலின் பேரில், திரைப்படங்கள் எடுக்க முடிவு செய்தார்.

Raai Laxmi: 35-ஆவது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ராய் லட்சுமி! ரசிகர்களுக்கு வைத்த கவர்ச்சி ட்ரீட் இதோ!

அதன்படி 1990-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வியூகம்' என்கிற மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது ஒரு போலீஸ் கிரைம் திரில்லர் ஸ்டோரியாக இருந்ததால்... இவரின் படைப்பு தனித்துவமாக பார்க்கப்பட்டது. முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக மாறியதை தொடர்ந்து, மலையாள முன்னணி நடிகர்களான மோகன் லாலை வைத்து 'யோதா' என்கிற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து பல மலையாள படங்களை இயக்கியுள்ள இவர், 5க்கும் மேற்பட்ட இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.
 

அதே போல் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சில படங்களை தயாரித்தும் உள்ளார் சங்கீத் சிவன். இந்நிலையில் 65 வயதாகும் சங்கீத் சிவன் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Aruvi Serial Warped: முடிவுக்கு வந்தது சன் டிவி தொடர் 'அருவி'! கடைசி நாளில் பிரபலங்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்!

click me!