பேட் கம்மின்ஸூக்கு பர்த்டே டிரீட் கொடுத்த ஹெட், அபிஷேக் சர்மா – வரலாற்று சாதனை படைத்த ஹைதராபாத்!

First Published May 8, 2024, 11:46 PM IST

ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிறந்தநாள் டிரீட் கொடுக்கும் வகையில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளனர்.

SRH vs LSG IPL 2024

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL, SRH, Travis Head , Abhishek Sharma

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

SRH vs LSG IPL 2024

இதில், அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடினார். தொடக்கம் முதலே ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். மேலும், இந்த சீசனில் 2ஆவது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

SRH vs LSG IPL 2024

பவர்பிளேயில் 2ஆவது முறையாக 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SRH vs LSG IPL 2024

டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

SRH vs LSG IPL 2024

அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 75 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து வரலாற்று சாதனையை கேப்டன் கம்மின்ஸூக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளனர்.

SRH vs LSG IPL 2024

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

SRH vs LSG IPL 2024

இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

click me!