Horoscope Today: ரிஷபம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று ஜாக்பார்ட் யோகம்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

First Published May 21, 2022, 5:00 AM IST

Today Horoscope: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்ட காற்று வீசும். சிலருக்கு எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளின் என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:
 
ஆன்மிக சிந்தனையை வளர்ப்பது, உங்களுக்கு நேர்மறையான ஆற்றலை வழங்கும். புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உங்கள் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி விஷயத்தில் அதிக அக்கறையுடன் இருங்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஊடகங்கள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வீட்டில் இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை. ஆரோக்கியம் மேம்படும். உங்கள் பணிச்சுமை அதிகரிப்பால் இந்த நேரத்தில், மற்ற நபர்களின் உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இன்றைய நாளில் மீடியா மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான செயல்களில் அதிக முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். 

Gemini: Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இன்று நீங்கள் பல முக்கிய பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை இருக்கும்.இருப்பினும், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படுங்கள்.  வெளி நபரின் குறுக்கீடு உங்கள் குடும்பத்தில் வீட்டின் அமைதிக்கு இடையூறு ஏற்படலாம். பெரியவர்களின் அறிவுரைகளை புறக்கணிக்காதீர்கள். வீடு மற்றும் பணியிடத்தில் நபர்களுடன் இருந்து வந்த  கருத்து வேறுபாடுகள் இன்று தீரும். இருப்பினும், வணிக பிரச்சனைகள் உங்கள் வீட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கிளைமேட் மாற்றம் காரணமாக ஒவ்வாமை மற்றும் இருமல் ஏற்படலாம். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:
 
இன்று உங்களுக்கு ஆன்மிகம் தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வீட்டின் பெரியோர்களின் ஆசியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களுக்கான இன்று அதிர்ஷ்டம் பிறக்கும். திருமணம் காரியங்கள் தடை படலாம். இருப்பினும், பொறுமையாக காத்திருப்பது வெற்றியை தரும். பணிஇடத்தில் தொய்வு ஏற்படலாம். வீட்டுச் சூழலும் எதிர்மறையாக இருக்கலாம். பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களுடன் எந்த பிரச்சனையும் வேண்டாம். ஊடகம் தொடர்பான தொழில்கள் இன்று ஆதாயமடையும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

 சிம்மம்:

சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, தோட்டத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள், இயற்கையோடு நெருக்கமாக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் உங்கள் திறமைகளை ஈடுபடுத்துங்கள். உங்கள் பிரச்சனைகள் பற்றி நம்பிக்கையான நண்பரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் எதாவது பேசுவது எதிர்மறையான சூழலை உருவாக்கும். இன்று உங்களுக்கு புறக்கணிப்பு அல்லது மன அழுத்தம் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்தமாக சூழல் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினரிடம் நேரம் செலவிடுங்கள்..

VIRGO -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:

இன்றைய வேலையின் அதிக கவனமுடன் செயல்படுங்கள். இது உங்களை மேலும் வலுவாக்கும். அதே சமயம் தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்த்துக் கொள்வீர்கள். வீட்டின் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். பெரியோர்களின் ஆசியும் ஒத்துழைப்பும் ஆசீர்வாதமாக இருக்கும். தேவையில்லாத கோபம், சந்தேகம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இன்று கணவன்-மனைவிக்குள் காதல் உறவு இருக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல் பிரச்சனை சரியாகும்.

Libra - Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று பொருளாதார நிலை நன்றாக இருக்கும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், இன்று அந்த விவகாரம் மேலும் சிக்கலாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே கவனமாக இருங்கள் அல்லது தவிர்க்கவும். தேவைற்ற விஷயங்களில் பணத்தை முதலீடு செய்து  சிக்கிக் கொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு தொழிலில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். தற்போதைய எதிர்மறை சூழ்நிலைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். 
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியினர் உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுவதில், சிறப்பான பங்கு இருக்கும். இன்று நீங்கள் தெய்வீக சக்தியால் ஆசீர்வதிக்கப்படுவதைஉணர்வீர்கள். உங்கள் செயல் திறன் பாராட்டை பெறும்.   தாம்பத்திய வாழ்வில் தொடர்ந்து வரும் பிரச்சனைகளால் டென்ஷன் இருக்கும். வீட்டில், இருதரப்பு பேச்சையும் கேட்டு உங்கள் பிரச்சனை தீரும்.  வருமானம் அதிகரிக்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். 
இந்த நேரத்தில் கடின உழைப்பு இருக்கும். உங்களின் ஈடுபாட்டால் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.இன்று உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு: 

தனுசு, ராசியில் பிறந்தவர்கள், அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுபட, பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் ஈடுபடுங்கள். இன்று  உடல் மற்றும் மன சோர்வில் இருந்து விடுபடலாம். குடும்ப சூழ்நிலையும் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். உங்கள் நிதி நடவடிக்கைகளில் அலட்சியமாகவோ அல்லது சோம்பேறியாகவோ இருக்க வேண்டாம். இல்லையெனில், கடன் வாங்கிய பணம் கிடைப்பது கடினம். நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படலாம். இன்று வணிக நடவடிக்கைகள் மேம்படும். உங்கள் ஆரோக்கியம்  மேம்படும்.

Capricorn -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்:

மகரம் ராசியினர் இந்த நேரத்தில் உங்களின் கடின உழைப்பு சிறந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களின் திறமையும் வேலை செய்யும் திறனும் புதிய வெற்றியை உருவாக்கும். நெருங்கிய உறவினர்களுடனான உறவும் வலுப்பெறும். வருமானத்தை விட அதிக செலவுகள் இருக்கும். மன அழுத்தம் உண்டாகும். உங்களின்  தற்போதைய சூழ்நிலையில்  வியாபாரத்தை சமாளிக்க முடியும். உங்கள் பிரச்சனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கை குறையலாம். 

Aquarius -Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்:

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு வரலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் முதியவரின் உடல்நிலையில் அக்கறை மற்றும் அவர்ககளை சரியான பராமரிப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் நிதி நிலைமைக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.  வணிக இடத்தில் பணியாளர்களின் அலட்சியத்தால் தவறு நேரலாம். குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

(Pisces) Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்:

மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும் . உங்கள் சகிப்புத்தன்மையின் மூலம் பிரச்சனைகளை வெல்வீர்கள். வியாபாரத்தில் படிப்படியாக நிலைமை சீராகும். பொருளாதார நிலையும் மேம்படும். பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரலாம். தனிப்பட்ட தேவைகளையும் வீட்டுத் தேவைகளையும் கவனித்துக்கொள்வது அவசியம். இந்த நேரத்தில், குழந்தைகள் மட்டும் நிறுவனம் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

 மேலும் படிக்க....இன்று ரிஷபம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும்...வாழ்வில் வெற்றி நிச்சயம்...! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்....

click me!