10, 12 ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது .? எந்த தேதியில் வெளியீடு.? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

Published : Apr 30, 2024, 08:23 AM IST
10, 12 ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது .? எந்த தேதியில் வெளியீடு.? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட தாமதமாகும் என தகவல் வெளியான நிலையில், திட்டமிட்டப்படி மே 6ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுவையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த  சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள்  மாணவர்கள் தேர்வு எழுதினர்.  அதில்,  3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள், 4 லட்சத்து 13 ஆயிரத்து 99 மாணவிகள் மற்றும் ஒரு பாலினத்தவர் அடங்குவர். தேர்வானது மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

School College Holiday: மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை! கலெக்டர் சொன்ன குட் நியூஸ்..! என்ன காரணம் தெரியுமா?

தேர்வு முடிவில் காலதாமதமா.?

இதே போல 10ஆம் வகுப்பு பொறுத்தவரை இந்த ஆண்டு சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஆசிரியர்கள் அதிகளவில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அனைத்து பேப்பர்களும் திருத்தப்பட்டு விட்டது. தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பேப்பர் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் திட்டமிட்டப்படி மே 6 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 10 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவானது வெளியிடப்படவுள்ளது

தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம்.?

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தாங்ககள் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு தேர்வு முடிவுகளை அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை தாங்கள் படித்த பள்ளியில் வழங்கவும் பணியையும் பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.  

TN 10th Exam 2024 Result : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

PREV
click me!

Recommended Stories

த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்