Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் எந்ததெந்த மாவட்டத்தில் மழை பெய்யப்போகுது தெரியுமா?

First Published Apr 30, 2024, 8:09 AM IST

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rain Alert

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மே 1-ம் தேதி வரை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். 

Tamilnadu Rain

அதேபோல் மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே3ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: School College Holiday: மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை! கலெக்டர் சொன்ன குட் நியூஸ்..! என்ன காரணம் தெரியுமா?

Summer Rain

இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது 10 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

click me!