எல்லாருமே இவ்வளவு படிச்சிருக்காங்களா? இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயாண மூர்த்தி குடும்பத்தினரின் கல்வித்தகுதி..

First Published Mar 21, 2024, 11:01 AM IST

இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி குடும்பத்தின் கல்வித்தகுதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் குடும்பமும் ஒன்று. நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி தம்பதி பலருக்கு உத்வேகமாக உள்ளனர். இவர்களின் வெற்றி மற்றும் செல்வாக்கை வடிவமைப்பதில் அவர்களின் கல்வியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. கல்வி எவ்வாறு வாழ்க்கையை மாற்றும்  என்பதற்கும் சமூக முன்னேற்றத்திற்கு எப்படி பங்களிக்கும் என்பதைக் காட்டுகிறது. நாரயண மூர்த்தி குடும்பத்தின் கல்வித்தகுதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாராயண மூர்த்தி:

இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி, மைசூர் பல்கலைக்கழகத்தின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் 1967 ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, கான்பூர் ஐஐடியில் இந்திய மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரின் சாதனைகளைப் பாராட்டி, 2007 இல் லான்காஸ்டர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவப் பட்டம் வழங்கியது.

சுதா மூர்த்தி:

புகழ்பெற்ற எழுத்தாளர், பரோபகாரர் மற்றும் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி, B.V.B பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். சுதா மூர்த்தியின் பொறியியல் கல்வியானது அவரது பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றிற்கான அடித்தளத்தை வழங்கியது, பின்னர் தனது பணியின் பல்வேறு அம்சங்களில் தனது கவ்லியை பயன்படுத்தினார்.

அக்ஷதா மூர்த்தி:

நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி, கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் பிரஞ்சு படித்தார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாக (MBA) பட்டம் பெற்றதன் மூலம் அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார். ஆடை உற்பத்தியில் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங் டிப்ளமோவும் பெற்றுள்ளார். அக்ஷதாவின் கல்விப் பயணம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வணிக புத்திசாலித்தனத்தின் கலவையை பிரதிபலிக்கிறது, கார்ப்பரேட் உலகில் அவரை ஒரு வெற்றிகரமான நிபுணராக நிலைநிறுத்துகிறது.

Meet billionaire NR Narayana Murthy's son Rohan, who built his own company instead of working at Infosys

ரோஹன் மூர்த்தி:

நாராயணா மற்றும் சுதா மூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்தி, வலுவான கல்விப் பின்புலம் கொண்டவர். நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பி.ஹெச்டி பட்டம் பெற்றுள்ளார். 

ரிஷி சுனக்:

இங்கிலாந்தின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமரும், நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்லூரியில் பயின்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் படிப்பைத் தொடர்ந்தார், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார்..

அபர்ணா:

அபர்ணா நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோரின் மருமளும், ரோஹன் மூர்த்தியின் மனைவியுமான அபர்ணா, ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் கே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் எஸ்பிஐ ஊழியர் சாவித்திரி கிருஷ்ணன் ஆகியோரின் மகள் ஆவார். அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார்.

click me!