Indian 2 : தனுஷ் படத்துக்கு வழிவிட்ட கமல்; அதிரடியாக மாற்றப்படும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி

First Published May 6, 2024, 2:28 PM IST

கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Raayan, indian 2

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

Indian 2 Release Postponed

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு, அப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது. ஜூன் மாதம் 13-ந் தேதி அப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பின்னணி பணிகள் முடிவடைய சற்று தாமதம் ஆவதால் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி வருகிற ஜூலை 18-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளதாம் படக்குழு.

இதையும் படியுங்கள்... TTF vasan : மனசு வலிக்குது.. குக் வித் கோமாளில இதெல்லாமா பண்றாங்க- புட்டு புட்டு வைத்த TTFன் காதலி ஷாலின் சோயா

Raayan

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஜூலை 18-க்கு தள்ளிப்போய் உள்ளதால், அன்றைய தினம் திரைக்கு வர இருந்த நடிகர் தனுஷின் ராயன் திரைப்படத்தின் ரிலீஸும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி அப்படம் ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே, அதாவது வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் படமாக தனுஷின் ராயன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raayan release Date changed

ராயன் திரைப்படம் தனுஷின் 50-வது படமாகும். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தானே இயக்கியும் இருக்கிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... OTT star : ஒரு எபிசோடுக்கு 18 கோடி சம்பளம்... ஓடிடியில் வசூல் ராஜாவாக வலம் வரும் நடிகர் யார் தெரியுமா?

click me!