
எளிமையான குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஒரு சிறு வாய்ப்பின் மூலம் தமிழ் திரையுலகில் டான்ஸ் அசிஸ்டன்டாக களம் இறங்கியவர் தான் ராகவா லாரன்ஸ். நடனத்தின் மீது அதிக ஆசை கொண்ட ராகவா லாரன்ஸ் பல திரைப்படங்களில் டான்ஸ் அசிஸ்டன்டாக பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு கோலிவுட் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும் இப்பொழுது புகழின் உச்சியில் ராகவா லாரன்ஸ் இருக்கின்றார் என்று கூறினால் அது மிகையல்ல. திரைத்துறையில் அவர் பயணிக்க துவங்கிய காலத்தில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.
அண்மையில் பிரபல நடிகர் பாலாவையும் தனது பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் லாரன்ஸ். அதேபோல இந்த மே மாதம் முதல் தேதியில் இருந்து "மாற்றம்" என்ற தலைப்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை அவர் செய்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களையும் இந்த "மாற்றம்" என்ற நிகழ்வில் பங்கேற்க அவர் ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தர்மபுரியில் வசித்து வரும் ஹரிஹரன் என்ற சிறுவனுக்கு படிப்புக்கான உதவியை செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். தந்தையை இழந்து படிக்க முடியாத நிலையில் இருந்த ஹரிஹரனை பற்றி கேள்விப்பட்ட லாரன்ஸ், உடனடியாக தர்மபுரி சென்று சிறுவனுடைய தாயை சந்தித்து அவனுடைய ஐஏஎஸ் கனவை நான் நினைவாக்குவேன் என்று உறுதி அளித்தார்.
அந்த தாயும் குடும்ப உறுப்பினர்களும் கண்ணீர் மல்க ராகவா லாரன்சுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ இப்பொது இணையத்தில் பெரும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அண்மையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் மாற்றம் என்ற இந்த முன்னெடுப்பில் இனைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.