
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு, நான்கே மாதங்களில் விக்கி நயன் ஜோடிக்கு அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அந்தக் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் விக்கி - நயன் ஜோடி. அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் சிவன் மற்றும் உலக் தெய்விக் சிவன் என பெயரிட்டு உள்ளனர்.
குழந்தை பிறந்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நயன்தாரா, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளித்து வருகிறார். மறுபுறம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் மகன்களின் பெயரை வைத்து பாடல் எழுதி தன் அன்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலில் தன் மகன்கள் இருவரின் பெயரை பயன்படுத்தி எழுதிய அந்தப் பாடல் வேறலெவலில் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... GV Prakash : ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்தா? காட்டுத்தீ போல் பரவும் தகவலால் அதிர்ச்சியில் கோலிவுட்
இந்த நிலையில், இன்று உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் தங்களது தாயைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் காதல் மனைவி நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு, அவர் தனது சேட்டைக்கார மகன்களை எப்படி அன்பாக பார்த்துக் கொள்கிறார் என்பது குறித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் நயன்தாரா பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : ஒரு தாயாக பார்த்தால் உனக்கு 10க்கு 99 தரலாம். இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். திரும்ப திரும்ப சொல்கிறேன் நீ தான் தலைசிறந்த என்னுடைய உயிர் உலகம் என பதிவிட்டுள்ளார். ரத்தமாரே பாடலை அடிக்கடி பதிவிட்டால் அனைவரும் ட்ரோல் செய்கிறார்கள் என்பதால் இம்முறை ஆவேஷம் பட பாடலை பதிவிட்டு உள்ளார் விக்னேஷ் சிவன். அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.
இதையும் படியுங்கள்... Kamal : 35 ஆண்டுக்கு பின் முதன்முறையாக... இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் படங்களால் கமல்ஹாசன் செய்ய உள்ள சாதனை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.