- Home
- Gallery
- GV Prakash : ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்தா? காட்டுத்தீ போல் பரவும் தகவலால் அதிர்ச்சியில் கோலிவுட்
GV Prakash : ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்தா? காட்டுத்தீ போல் பரவும் தகவலால் அதிர்ச்சியில் கோலிவுட்
காதலித்து திருமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி ஜோடி விரைவில் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

GV prakash, saindhavi,
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ். முறைப்படி சங்கீதம் பயின்ற இவர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதுமட்டுமின்றி அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. வெயில் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜிவிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
GV prakash wife saindhavi
பின்னர் அஜித்தின் கிரீடம், வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், ரஜினி நடித்த குசேலன், சிம்புவின் காளை, விஜய்யின் தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தார் ஜிவி பிரகாஷ். பல்வேறு தரமான படங்களுக்கு இசையமைத்தும் ஜிவிக்கு எட்டாக் கனியாக இருந்த தேசிய விருது, சுமார் 17 வருட காத்திருப்புக்கு பின்னர் சூரரைப் போற்று படத்துக்காக கிடைத்தது.
music director GV prakash,
இசையமைப்பாளராக தொடர்ந்து வெற்றிநடை போட்டு வந்த ஜிவி பிரகாஷ், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அதிர்ச்சி கொடுத்தார். அவர் நடித்த முதல் இரண்டு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால், மியூசிக் டைரக்ஷனுக்கு ரெஸ்ட் விட்டு ஹீரோவாக பிசியானார் ஜிவி. ஆனால் அதன்பின்னர் அவர் நடித்த பென்சில், நாச்சியார், எனக்கு இன்னோரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லி, செம, குப்பத்து ராஜா, வாட்ச்மேன் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன.
இதையும் படியுங்கள்...Aishwarya Rajesh : லோ நெக் ஆடை அணிந்து... இளம் நெஞ்சங்களில் கவர்ச்சி தீ மூட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
GV Prakash daughter anvi
பின்னர் சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய ஜிவி பிரகாஷ், அவ்வப்போது பேச்சிலர், அடியே போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் ரெபல், கள்வன், டியர் ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின. ஆனால் இந்த மூன்று படங்களும் ரசிகர்களை கவரத் தவறியதால் தோல்வியை தழுவின. தற்போது ஜிவி பிரகாஷ் கைவசம் இடி முழக்கம், 13 ஆகிய படங்கள் உள்ளன.
GV Prakash, Saindhavi relationship
இப்படி தமிழ் திரையுலகில் ஹீரோ மற்றும் இசையமைப்பாளராக கலக்கி வரும் ஜிவி பிரகாஷ், கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து கரம்பிடித்தார். இருவரும் ஸ்கூலில் ஒன்றாக படிக்கும்போதே காதலித்து வந்தனர். இந்த ஜோடிக்கு கடந்த 2020-ம் ஆண்டு அன்வி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் சேர்ந்து ஏராளமான ரொமாண்டிக் ஹிட் பாடல்களை பாடி இருக்கின்றனர்.
Is GV Prakash and Saindhavi heading for Divorce
இந்த நிலையில், பாடகி சைந்தவியும் - இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் விரைவில் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம். அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...குக் வித் கோமாளிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் களமிறங்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட் இதோ