கள்ளச்சந்தையில் சரக்கா விக்கிற! ரவுண்டு கட்டிய திண்டுக்கல் பாமக வேட்பாளர்! தெறித்து ஓடிய திமுக கவுன்சிலர்!

First Published Apr 17, 2024, 4:51 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்ட போது கள்ளத்தனமாக திண்டுக்கல் புறவழிச்சாலையில் மது விற்பனை செய்த குடோனை பாமக வேட்பாளர் சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

Dindigul illegal liquor sale

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது திண்டுக்கல் புறவழி சாலையில் கொட்டப்பட்டி சாலையில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

Thilagabama

உடனடியாக பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்கு உள்ளே நுழைந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த விற்பனையாளர்களை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

dindigul Lok Sabha PMK candidate Thilagabama

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த குடோனை சீல் வைத்து விற்பனையாளர் சேசு என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திலகபாமா: இன்று மது விற்பனை செய்யக் கூடாது என்று தெரிந்தும் இங்கு பாருடன் கூடிய விற்பனை நடைபெறுவது காவல்துறைக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். ஐ.பெரியசாமியின் வீட்டிற்குப் பின்புறம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்று வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி.,க்கு போன் பண்ணினேன். ஸ்குவார்ட் அனுப்புகிறேன் என்றார். இப்போது வரை ஒரு நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டினார். 

thilagabama protest

தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையை தனக்கு சாதகமாக ஸ்டாலின் அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இது காவல்துறையா? இல்லை ஏவல் துறையா? என்று கேள்வி எழுப்பினார். இதுபோல எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கடையை மூட வேண்டும் என்று குறிப்பிட்ட திலகபாமா பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

thilagabama protest

தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திலகபாமா, பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரை ஓடி ஓட விரட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. திண்டுக்கல்லில் 16வது வார்டு திமுக கவுன்சிலர் சேகர் ஜி டி என் சாலையில் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாமக வேட்பாளர் திலகபாமா பணப்பட்டு வாடா செய்தவர்களை கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதற்கு முன்னதாக திண்டுக்கல் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்காளர்களுக்கு  தலா 300 ரூபாயும், அதிமுகவினர் 500 ரூபாயும் பணப்பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

click me!