Ajithkumar : இளையராஜா இசையில் அஜித் ஹீரோவாக நடிச்சது ஒரே ஒரு படம் தானா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

First Published Mar 21, 2024, 9:51 AM IST

நடிகர் அஜித்குமார் தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தாலும் அவர் ஹீரோவாக நடிச்ச ஒரு படத்துக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்து உள்ளார்.

Ajith, Ilaiyaraaja

தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இசை ராஜ்ஜியம் நடத்தி வருபவர் இளையராஜா. இவரது இசைக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தன்னுடைய இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இளையராஜா. முன்பெல்லாம் இளையராஜா இசையமைத்தால் தான் அந்தப்படம் வியாபாரம் ஆகும் என்கிற அளவுக்கு செம்ம டிமாண்ட் உள்ள இசையமைப்பாளராக வலம் வந்தார் இசைஞானி இளையராஜா.

Ilaiyaraaja Biopic

தற்போது அவருக்கு வயது 80-ஐ கடந்துவிட்டாலும் இன்றளவும் செம்ம பிசியாக பணியாற்றி வருகிறார் இளையராஜா. அவர் கைவசம் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது. இதுதவிர இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு பயோபிக் படமும் உருவாகி வருகிறது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கும் இசைஞானி தான் இசையமைக்க உள்ளார். 

Ilaiyaraaja

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் என்றால் அது ரஜினி, விஜய், கமல் மற்றும் அஜித் தான். இவர்களில் ரஜினி, விஜய், கமல் ஆகியோர் நடித்த ஏராளமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். ஆனால் நடிகர் அஜித்துடன் மட்டும் இளையராஜா பெரியளவில் பணியாற்றியதில்லை. நடிகர் அஜித் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோவாக நடித்து வந்தாலும் இதுவரை அவர் கதாநாயகனாக நடித்த ஒரே ஒரு படத்துக்கு மட்டும் தான் இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Priyanka Chopra : அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா சென்று... ராமரோடு செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா

ramesh kanna

அந்த படம் தான் தொடரும். கடந்த 1999-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் தான் இளையராஜாவும் அஜித்தும் பணியாற்றிய ஒரே ஒரு படம். இப்படத்தை இயக்கியவர் நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா தான். இப்படம் மூலம் தான் ரமேஷ் கண்ணா இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னர் வரை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் ரமேஷ் கண்ணா. படையப்பா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது தான் அஜித்தின் தொடரும் படத்தை இயக்கி இருக்கிறார் ரமேஷ் கண்ணா.

Ajith Ilaiyaraaja movie

கடந்த 1995-ம் ஆண்டே இளையராஜா இசையில் அஜித் ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் ராஜாவின் பார்வையிலே. இதில் அஜித் சோலோ ஹீரோ கிடையாது, இதில் விஜய்யும் அவருடன் இணைந்து நடித்திருந்தார். இளையராஜா இசையில் அஜித் சோலோ ஹீரோவாக நடிக்க மாட்டாரா என ஏங்கி வந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது தான் தொடரும் படம். ஆனால் அப்படத்துக்கு பின் 25 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Vijay: சேட்டா, சேச்சீஸ்.. மலையாளத்தில் பேசி கேரள ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரல் வீடியோ இதோ

click me!