சனிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இந்த விமானம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய இடைநில்லா விமானம் அடிக்கடி டெல்லியில் இருந்து சர்வதேச பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில், ஏர் இந்தியா நிறுவனம் ஜூன் 2ஆம் தேதி முதல் டெல்லி - கோயம்புத்தூர் - டெல்லி இடையே இடைநில்லா விமானத்தை இயக்க உள்ளது.
டெல்லியில் இருந்து AI 547 என்ற விமானம் மாலை 3 மணிக்கு புறப்படும். மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து டெல்லி திரும்பும் விமானம் AI 548 மாலை 6.45 மணிக்கு புறப்படும். இரவு 9.50 மணிக்கு டெல்லியில் உள்ள T-3 முனையத்தை சென்றடையும்.
சனிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இந்த விமானம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய இடைநில்லா விமானம் அடிக்கடி டெல்லியில் இருந்து சர்வதேச பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டியர் புள்ளிங்கோ... உங்க அம்மாவை ஹெல்தியா பாத்துக்கோங்க... சிம்பிளா இதை ஃபாலோ பண்ணுங்க!
தற்போது, ஏர் இந்தியா, சென்னை வழியாக கோவைக்கு தினசரி விமானத்தை இயக்கி வருகிறது. இதன் பயண நேரம் அதிகமாக உள்ளது. கோவை செல்லும் விமானம், AI 429 டெல்லியில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. திரும்பும் விமானம், AI 539 கோவையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படுகிறது. மற்றும் 7.50 மணிக்கு டெல்லி சென்றடைகிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை எளிதாக இணைக்க ஏர் இந்தியா டெல்லிக்கு இடைநில்லா விமானத்தை இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த புதிய விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வந்துசேரும் நேரம் வெளிநாட்டு விமானங்களில் ஏறுவதற்கு வசதியான நேரமாக இருப்பதால், சர்வதேச பயணங்கள் மேற்கொள்ள இந்த இடைநில்லா விமானம் ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல, கோயம்புத்தூர் செல்லும் விமானம் சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கும் பயன்படும்.
வெறும் 8,499 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்! நோக்கியா G42 மொபைலுக்கு பக்கா டீல்!