வாழ்வா? சாவா? போராட்டத்தில் பாகிஸ்தான்: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற கடுமையான போராட்டம்!

First Published Jun 11, 2024, 8:48 PM IST

அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில் கடைசி வாய்ப்பாக கனடாவிற்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது.

IND vs PAK, T20 World Cup 2024 Points Table

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற அமெரிக்கா, இந்தியா, கனடா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 1 மற்றும் 2ஆவது இடத்தை பிடித்துள்ளன.

IND vs PAK, T20 World Cup 2024

கனடா விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்துள்ளன.

Pakistan, T20 World Cup 2024 Points Table

இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எஞ்சிய 2 போட்டியிலும் அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். மேலும், அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இந்த தொடரிலிருந்து வெளியேறும். தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வரும் 22ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் விளையாடி வருகின்றன.

T20 World Cup 2024, Pakistan

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி கனடா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரையில் கனடா 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Latest Videos

click me!