புதிய துடைப்பத்தில் வீடு பெருக்கினா மீண்டும் மீண்டும் தூசி வருதா..? உங்களுக்கான 3 சூப்பரான யோசனைகள் இதோ!

First Published May 13, 2024, 11:57 AM IST

நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் புதிய துடைப்பத்தில் இருந்து, மீண்டும் மீண்டும் தூசி வெளியேறுகிறதா.. இதனால் வீட்டை சுத்தம் செய்வதில் கடினமாகிறதா.. உங்களது இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக 3 வழிகள்  இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை..

துடைப்பம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுகிறது. துடைப்பம் இல்லாத வீட்டை நம்மால் பார்க்கவே முடியாது. மேலும் ஒரு துடைப்பம் வாங்கி, அதை நீங்கள் மாதக்கணக்கில் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. என்னவென்றால், புதிய துடைப்பத்தில் இருந்து தூசிகள் வெளியேறும்.

நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம், அதிலிருந்து மீண்டும் மீண்டும் தூசி வெளியேறுகிறதா.. இதனால் வீட்டை சுத்தம் செய்வதில் கடினமாகிறதா.. உங்களது இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக 3 வழிகள்  இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும், இனி புதிய துடைப்பத்தால் கவலைப்பட வேண்டியதில்லை.

முதல் வழி: இதற்கு முதலில் புதிய துடைப்பத்தை வீட்டின் வெளியிலோ அல்லது மொட்டை மாடியிலோ வைத்து அதன் குச்சிகள் வெளியே வராமல் இருக்க துடைப்பத்தை கயிற்றால் கட்டுங்கள். இப்போது, துடைப்பத்தை சுவர் அல்லது தரையில் மீண்டும் மீண்டும் மெதுவாக அடிக்கவும். இப்படி செய்தால், துடைப்பத்தில் இருந்து எல்லா தூசிகளும் நீங்கிவிடும். பின்னர் நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது தூசிகள் வராது.

இதையும் படிங்க:  அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வந்த வெள்ளித் துடைப்பம்!

இரண்டாவது வழி: புதிய துடைப்பம் சுத்தம் செய்ய ஒரு சீப்பு பயன்படுத்தலாம் தெரியுமா.. எப்படியெனில், துடைப்பத்தை கீழ்நோக்கி வைத்து மேலிருந்து கீழாக சீப்புங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் துடைப்பத்தில் இருந்து அனைத்து தூசிகளும் ஒரேயடியாக நீங்கி விடும். மேலும் நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது அதன் தொல்லையை சந்திக்க வேண்டியதில்லை.

இதையும் படிங்க:  Vastu Tips : 'துடைப்பம்' வீட்டின் தோஷங்களை நீக்கும் தெரியுமா? துடப்பதை இப்படி வையுங்க..பண தட்டுப்பாடு வராது..!

மூன்றாவது வழி: இதற்கு நிரம்பிய ஒரு வாளியில், புதிய துடைப்பத்தை  ஊற வைக்கவும். இதை நீங்கள் 3 முதல் 4 முறை இப்படி செய்தால், புதிய துடைப்பத்தில் இருக்கும் தூசி தண்ணீருக்குள் வரும். இப்போது, துடைப்பத்தை வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்த பிறகு நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!