Super Star Rajnikanth : ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெய்லர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த பட பணிகளை தொடங்கினார். அந்த வகையில் "ஜெய் பீம்" திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.
தற்பொழுது அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள "கூலி" என்கின்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இடைப்பட்ட நாள்களில் ஓய்வெடுக்க அவர் அண்மையில் அமீரகம் சென்றிருந்தார். அங்கே அவர் பிரபல லு லு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி அவர்களை சந்தித்து உரையாடினார்.
ஆடிஷனில் 100-க்கு 2 மதிப்பெண்கள் பெற்ற உச்சநடிகர்.. பின்னர் 25 ஹிட் படங்களை கொடுத்தவர்..
அமீரகத்தில் உள்ள பல முக்கிய தொழிலதிபர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நட்பு ரீதியாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் லு லு நிறுவன தலைவர் யூசுப் அலி, தனது மிரளவைக்கும் வெள்ளை rolls-royce காரில் சூப்பர் ஸ்டாரை அருகில் அமர வைத்து, அவரே அந்த வாகனத்தை ஓட்டிச் சென்று அவருக்கு அமீரகத்தில் சில இடங்களை சுற்றி காட்டியதாக கூறப்படுகிறது.
The owner of Lulu Group of Companies, Mr. Yusuf, took for a jolly ride in his Rolls Royce in Abu Dhabi. pic.twitter.com/z3WwNNcVEU
— WarLord (@Mr_Ashthetics)தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அரபு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே வர்த்தகத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் நபரான யூசுப் அலி, ரஜினிகாந்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் லு லு குழுமத்தின் CEO சைஃபி ரூபாவாலாவையும் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.