Actor Naga Chaitanya : பிரபல நடிகர் நாக சைதன்யா ஒரு ஆட்டோமொபைல் விரும்பி, ஏற்கனவே பல சொகுசு கார்களை வைத்துள்ள அவர், இப்பொது புதிய சூப்பர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
பிரபல நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மகன் தான் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா. 18 வயது வரை தனது இளமைப் பருவத்தை சென்னையில் கழித்த நாக சைதன்யாவிற்கு சிறு வயது முதலிலேயே கார் மற்றும் பைக்குகள் மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது தந்தையின் காரை அவருக்கு தெரியாமல் பலமுறை வெளியே எடுத்துச் சென்று, அவரிடம் மாட்டியது உண்டு என்று நாக சைதன்யாவை பல பேட்டியில் கூறியுள்ளார்.
அண்மையில் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் 110 என்கின்ற காரை வாங்கிய நாக சைதன்யா ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை தன்வசம் வைத்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு ஒரு பிரபல நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், எனது கனவு கார் ஒன்றை விரைவில் நான் வாங்குகிறேன் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியிருந்தார்.
அதன்படி கடந்த மே மாதம் 17ம் தேதி தனது கனவு காரான Porsche 911 GT3 RSஐ வாங்கியுள்ளார். இந்திய சந்தையில் அதன் மதிப்பு சுமார் 3.5 கோடி ரூபாயாக இருக்கிறது. சென்னையில் உள்ள Porsche கார் ஷோரூமில் தான் அவர் அந்த காரை தற்பொழுது வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு பதிவை வெளியிட்டு, நாக சைதன்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, கடந்த 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு இருவரும் தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நாக சைதன்யா, வெங்கட் பிரபுவின் கஸ்டடி என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.