மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் பூஜையுடன் தொடக்கம்; உற்சாகத்தில் தென்மாவட்ட மக்கள்

By Velmurugan s  |  First Published May 21, 2024, 5:25 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான தமிழக அரசின் சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனம் நிலத்தை சமன் செய்வதற்கான பணிகளை பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.


மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனாலும் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு, ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜைக்காவுடன் கடனுக்கான ஒப்பந்தத்தில் 2021 மார்ச்சில் கையெழுத்திட்டது.

இந்த நிலையில், கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை வரப்பெற்றுள்ளதாகவும், அதனால் 33 மாதங்களில் விரைந்து கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

மதுரையில் ஓர் ஐந்தருவி; தொட்டியில் இருந்து வெளியேறிய நீரில் குடும்பமாக குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்

‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் கட்டுமானப்பணி இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி (L&T Construction) என்ற நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை இன்னும் பெறவில்லை என்ற தகவல் வெளியானது. உடனடியாக ‘எய்ம்ஸ்’ நிர்வாகமும், தானே முன் வந்து, எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில் கட்டுமானத்திற்கு (Pre construction) முந்தைய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில், கடந்த மே 2-ம் தேதி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக, மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் மே 10-ம் தேதி, இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்திருந்தது.

கோடை மழைக்கே தாக்குபிடிக்காத கலைஞர் நூற்றாண்டு நூலகம்; 2 பிரிவுகள் மூடப்பட்டதால் வாசகர்கள் ஏமாற்றம்

இதனைத் தொடர்ந்து நேற்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டிடம், ஆய்வகக்கூடங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் 2160 கார், 2090 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூபாய் 1624 கோடியாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது.

இதனிடையே ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

click me!