Inimel Song: லோகேஷ் கனகராஜை 'இனிமேல்' ஆல்பம் பாடலின் நான் தேர்வு செய்தது இப்படி தான்? ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

First Published Mar 26, 2024, 2:46 PM IST

நேற்று வெளியான இனிமேல் ஆல்பம் பாடல் குறித்தும், இந்த பாடலுக்கு கதாநாயகனாக லோகேஷ் கனகராஜை எப்படி தேர்வு செய்தேன் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.  

பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். தன்னுடைய இசை பற்றியும் இந்த பாடல் குறித்தும் பேசிய ஸ்ருதிஹாசன்.. "எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். 

Nayanthara: உயிர் - உலகம் இருவரையும் மார்பில் சாய்த்துக்கொண்டு... தாய் பாசத்தை பொழியும் நயன்தாராவின் போட்டோஸ்!
 

எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது. 

நான் சிறுவயதில் இருந்தே திரையிசைப் பாடல்களுடன் சேர்ந்து பயணித்து வருகிறேன். அது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றால் மிகையில்லை. இதற்கு இடையில் Independent பாடல்கள் மீதான காதல் எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலுமே வளர்ந்து வந்தது. திரையிசை என்பது ஒரு மிகப்பெரிய மான்ஸ்டர் போன்றது. அதற்கு முன்னர் இன்டிபெண்டன்ட் மியூசிக் என்பது ஒரு 30 சதவீதமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். “இனிமேல்” ஆல்பத்திற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைக்க காரணம் என் தந்தை மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்திருக்கும் சலுகை. 

Siragadikka Aasai: அடடா முத்து பிரச்சனை பண்ணுவாருனு பார்த்தா.. விஜயா முத்திக்கொண்டாரே? சிறகடிக்க ஆசை அப்டேட்!
 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் என்று நினைக்கிறேன்.  ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்து தான் இந்த எண்ணம் உதயமானது. 

”இனிமேல்” பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான்.  ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்  நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான். 

Indian Movie: 'இந்தியன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோயின் இவங்க தான்!

எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  காதல் என்பது ஒரு டெலூஷன் என்பார்கள்.  அது நிறைவடையவில்லை என்றால் அது ஒரு மாயாவாகவே எஞ்சிவிடும். ஆனால் அது நிறைவடைந்துவிட்டால் அந்த மொமண்ட் Dreams Comes true” மொமண்ட்.  இது Delution-ல் இருந்து Solution நோக்கி காதல் நகரும் இடம் என்று கூறுவேன்” என்று பேசினார்.

click me!