Jamun Fruit: கல்லீரல் பிரச்சனையை சரி செய்யும் நாவல் பழம்...இன்னும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா..?

First Published Jun 29, 2022, 2:35 PM IST

Jamun Fruit- Healthy tips: கல்லீரல் பிரச்சனையை சரி செய்யும் நாவல் பழம்...கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நாவல் பழம், எப்படி உதவியது என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்து கொள்வோம்.

jamun-fruit

கல்லீரலின்  ஆரோக்கியத்தை பராமரிக்க நாவல் பழம், எப்படி உதவியது என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்து கொள்வோம். 

கல்லீரல் நமது உடலில் செயல்படும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். ஏனெனில், இந்த கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்ட கல்லீரலை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அப்படி, கல்லீரலின்  ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான உணவுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்து கொள்வோம். 

jamun-fruit

கல்லீரல் பாதிப்பின் தீமைகள்:

தவறான உணவுப் பழக்கம், அதிக உடல் எடை, அதிக மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். எனவே, நாம் கல்லீரல் பதிப்பில் இருந்து விடுபட முறையான உணவு பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். 

மேலும் படிக்க....Pregnancy Food: குழந்தை ஆரோக்கியமாக பிறக்க...கர்ப்ப காலத்தில் சாப்பிட்ட வேண்டிய சூப்பர் 10 உணவுகள்...

jamun-fruit

கல்லீரல் பாதிப்பிற்கு  நாவல் பழம் சிறந்தது:

நாவல் மரத்தின் பழம், இலை,  மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. 100 கிராம் நாவல் பழத்தில் 60 கலோரிகள் உள்ளது. மேலும், 0.2 கிராம் கொழுப்பு உள்ளது. 0.7 புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 9.5 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது.

jamun-fruit

நாவல் பழம் நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயைத் தடுக்கவும் இது உதவுதாம். நாவல் பழத்தின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோயைத் தடுக்கும்  பண்புகளை கொண்டுள்ளது. 

மேலும் படிக்க....Pregnancy Food: குழந்தை ஆரோக்கியமாக பிறக்க...கர்ப்ப காலத்தில் சாப்பிட்ட வேண்டிய சூப்பர் 10 உணவுகள்...

jamun fruit

கல்லீரல் பிரச்சனைகளை நீக்குகிறது. சிறுநீர் பிரச்சனையை சரி செய்கிறது. நாவல் பழத்தின் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் கற்களானது கரைந்துவிடும்.கல்லீரல் பிரச்சனை குணமாகும்.

மேலும் படிக்க....Pregnancy Food: குழந்தை ஆரோக்கியமாக பிறக்க...கர்ப்ப காலத்தில் சாப்பிட்ட வேண்டிய சூப்பர் 10 உணவுகள்...

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. தோல் பிரச்சனைகளை நீக்குகிறது. நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், மலசிக்கல், வாயு, தசை பிடிப்பு, வயிற்று போக்கு போன்றவைற்றை நீக்குகிறது.

click me!