இலவச லேப்டாப் திட்டம் பற்றிய தகவல் தவறானது: இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விளக்கம்

By SG Balan  |  First Published Apr 25, 2024, 4:42 PM IST

பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட உள்ளது என்று வாட்ஸ்அப் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் பற்றி பரவிவரும் போலிச் செய்திகள் தவறானவை என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) விளக்கம் அளித்துள்ளாது.

பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட உள்ளது என்று வாட்ஸ்அப் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Latest Videos

undefined

ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏஐசிடிஇ-க்கு தொடர்பில்லாத திட்டங்கள் குறித்து சில சமூக ஊடகங்கள்/ இணையதளங்கள் போலியான தகவல்களை பரப்புவது பலமுறை ஏஐசிடிஇ-யின் கவனத்துக்கு வந்துள்ளது. ஏஐசிடிஇ-யின் ஆணையம் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமான கவனம் செலுத்துகிறது.

எனவே, ஏஐசிடிஇ (AICTE) அங்கீகாரம் பெற்ற அனைத்து நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த வகையான தகவல்களைப் புறக்கணித்து, AICTE இணையதளத்தில் (https://www.aicte-india.org) இருந்து சரியான தகவலைச் சரிபார்க்கவும். அல்லது 011-29581000 மற்றும் 29581050 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

மேலும், இதுபோன்ற போலியான தகவல்கள் கவனத்திற்கு வந்தால், உடனடியாக ஏஐசிடிஇ-க்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கிக்கு கட்டுபாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி! விதிகளை மீறியதால் அதிரடி நடவடிக்கை!

click me!