
சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரீலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான '3' திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் கணிசமான தொகையை வென்று சாதனையும் படைத்தது.
அதேபோல 90களில் பிறந்த பல இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமான சூர்யாவின் "வாரணம் ஆயிரம்" திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Breaking: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் பணிபுரிந்த பெண் தற்கொலை முயற்சி!
கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படம் 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அவ்வளவு பசுமையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்நிலை இந்த திரைப்படம் கடந்த மாதம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சாக்லேட் பாய் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியான "மின்னலே" திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 23 ஆண்டுகள் கழித்து வெளியானாலும் இந்த திரைப்படம் மாபெரும் வசூலை கண்டது மாதவனுக்கு இருக்கும் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்து இன்றளவும் குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.