
தமிழில் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைவர், தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து, சிங்கம், நான் மஹான் அல்ல, பிரியாணி, பத்து தல போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது சூர்யா நடிப்பில் பிரமாண்ட பட்ஜட்டில் உருவாகியுள்ள கங்குவா படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவரின் வீடு தி.நகரில் உள்ள நிலையில் அங்கு மனைவி நேகா மற்றும் தன்னுடைய பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்கார பெண் லட்சுமி என்பவர், திடீர் என தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஞானவேல் ராஜாவின் மனைவி நேகாவின் தங்க நகைகள் சமீபத்தில் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் மற்றும், வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார். லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது அவருக்கும், இந்த திருட்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக லட்சுமி கூறியுள்ளார்.
எனினும் மீண்டும் காவல் நிலையத்திற்கு லட்சுமியை அழைத்து விசாரணை செய்ததோடு, எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, லட்சுமி தந்நடுய்ய வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் லட்சுமியை மீது மருத்துவமனையில் அனுபதித்தனர். தற்போது லட்சுமியின் மகள் கொடுத்த புகாரில், நேகா தன்னுடைய தங்க நகைகளை வேறு எங்கோ தொலைத்து விட்டு ஏழைகள் என்பதால் எங்களை கை காட்டுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். லட்சுமியின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது... போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.