Asianet News TamilAsianet News Tamil

Pregnancy Food: குழந்தை ஆரோக்கியமாக பிறக்க...கர்ப்ப காலத்தில் சாப்பிட்ட வேண்டிய சூப்பர் 10 உணவுகள்...

Pregnancy Healthy Food: கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கான ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.அதேபோன்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். 

Food items you should eat during pregnancy to get a healthy child
Author
Chennai, First Published Jun 29, 2022, 10:43 AM IST

வாழ்வில் பெண்கள் தாயாகி, ஒரு குழந்தையை பெற்றெடுக்க சராசரியாக ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை விட 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படும். அதேபோன்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் அதிகப்படியான உண்பதை தவிர்த்து, சில மணி நேர இடைவெளி விட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

Food items you should eat during pregnancy to get a healthy child

 பச்சை இலை காய்கறிகள்: முட்டை கோஸ், கீரை உள்ளிட்ட காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு போன்றவை பிறப்பு குறைபாடுகளை தடுக்க கூடியது.

மேலும் படிக்க....Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா...? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க....

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதேபோன்று, பேரிட்சை, பாதாம், முந்திரி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து ட்ரை ப்ரூட் ஜூஸை குடிக்கலாம்.

வெள்ளரி..நீரழிவை தடுக்க உதவும். 

மாமிசம் மற்றும் மீன்: கர்ப்ப காலத்தில் மாமிசம் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். 

Food items you should eat during pregnancy to get a healthy child

தக்காளி பழம்..வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. 

தானியங்கள்: கர்ப்ப காலத்தில் தானியங்களை உணவாக எடுத்துகொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். உதாரணமாக, பச்சைப் பயிறு, சுண்டல் ஆகியவற்றை ஊற வைத்து முளைக்கட்டிய பயிர்களாக சாப்பிடுவது நல்லது. 

மேலும் படிக்க....Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா...? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க....

மூலிகை டீ: மூலிகை இலைகளில் கொதிக்க வைத்து டீ மற்றும் க்ரீன் டீ போன்ற மூலிகை டீயை மிதமான சூட்டில் எடுத்துக்கொள்ளலாம். இவை உடலுக்கு தேவையான எனெர்ஜியை கொடுக்கும்.

கத்தரிக்காய்...குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் மேம்படுத்த கூடியது. இருப்பினும், இதை அளவோடு சாப்பிட வேண்டும்.

Food items you should eat during pregnancy to get a healthy child

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, பொதுவாக சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று, ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். மேற்சொன்ன, உணவு முறைகளை பின்பற்றி வாழ்வில், நலம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

மேலும் படிக்க....Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா...? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க....


 

Follow Us:
Download App:
  • android
  • ios