Gold Vastu Tips : வீட்டில் 'இந்த' இடத்தில் தங்கம் வைத்தால் செல்வம் பெருகுமாம்... ஒருமுறை வச்சிதான் பாருங்களே!

First Published Mar 30, 2024, 9:56 AM IST

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சரியான திசையில் தங்கத்தை வைத்தால் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் சிறந்த திசை மற்றும் இருப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பொருள் சரியான திசையில் வைக்கப்பட்டால், அந்த நபர் வாழ்க்கையில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. நீங்கள் வாஸ்து படி பொருட்களை வைத்திருந்தால், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.

பொதுவாகவே, பணம், தங்கம் ஆகிய இரண்டு விஷயங்களுக்காக ஒரு மனிதன் மிகவும் கடினமாக உழைக்கிறான். எனவே வாஸ்து படி வீட்டில் தங்கம் வைக்க சரியான திசையை பற்றி தெரிந்து கொள்வோம்.

தென்மேற்கு திசை: வாஸ்துப்படி, தங்கத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைக்க வேண்டும். இது வீட்டில் தங்கம் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அதுபோல, வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்கவும்.

மஞ்சள் நிறம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, எப்போதும் லாக்கர் இருக்கும் அறையின் சுவர் மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டும். இது உங்களுக்கு குபேரனின் ஆசீர்வாதத்தைத் தருவது மட்டுமல்லாமல், உங்கள் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.

வடக்கு திசை: தங்க நகைகள் இருக்கும் லாக்கர் வடக்கு நோக்கி பார்த்து தான் இருக்க வேண்டும். வாஸ்துவின் படி, வடக்கு திசை வீட்டில் செல்வம் மற்றும் ஆபரணங்களை வைப்பதற்கு உகந்ததாக கருதப்படுகிறது.

கண்ணாடி: வாஸ்து படி, வீட்டில் செல்வம், பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உங்கள் லாக்கரின் முன் ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும், வாஸ்து படி, வீட்டு லாக்கரின் கதவு குளியலறையை நோக்கி திறக்கவே கூடாது.

இதையும் படிங்க: தப்பி தவறிக் கூட பெட்ரூமை 'இந்த' திசையில் கட்டிடாதீங்க அவ்வளவுதானாம்..! பெஸ்ட் திசை எது தெரியுமா..?

தானம்: வாஸ்து படி, தங்கத்தை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. நீங்கள் ஒருவருக்கு தங்கத்தை தானம் செய்ய விரும்பினால், அதை ஒரு துறவிக்கு செய்யலாம். இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது.

இதையும் படிங்க: Tulasi Vastu : வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பண கஷ்டம் அதிகரிக்குமாம்..

இப்படி செய்யாதீங்க: தங்கத்தைப் பெறுவது அல்லது இழப்பது இரண்டும் சாதகமற்ற சூழ்நிலைகளாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு எப்போதாவது திடீரென்று தங்கம் கிடைத்தால், அதை உங்களுடன் வைத்திருக்காதீர்கள், அது நேரடியாக உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கும் மற்றும் உங்கள் செலவுகள் உயரக்கூடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தங்கம் வாங்க உகந்த நாள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்கள் தங்க நகைகள் வாங்க சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. இதனுடன், தீபாவளி, அட்சய திருதி, போன்ற சில சிறப்பு நாட்களும் உள்ளன, இந்த நாட்களிலும் தங்க நகைகள் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

click me!