Vijay Net worth : 250 கோடி சம்பளம்... 2 ஆண்டுகளில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சொத்து மதிப்பு - அதுவும் இவ்வளவா?

First Published Mar 29, 2024, 1:00 PM IST

நடிகர் விஜய்யின் சம்பளம் படத்துக்கு படம் அதிகரித்து வருவதால் அவரின் சொத்து மதிப்பும் கடந்த இரண்டே ஆண்டுகளில் உச்சம் தொட்டு இருக்கிறது.

Vijay

நடிகர் விஜய் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். மகனை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்த எஸ்.ஏ.சிக்கு அவரை ஹீரோவாக்கும் ஆசை துளிகூட இல்லையாம். அவருக்கு விஜய்யை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என விரும்பினாராம். ஆனால் விஜய்க்கோ படிப்பின் மீது நாட்டம் இல்லையாம். அவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற கனவுடன் இருந்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய படத்திலேயே விஜய்யை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்துள்ளார் எஸ்.ஏ.சி.

Thalapathy Vijay

மாண்புமிகு மாணவன் படம் மூலம் விஜய்யின் ஹீரோ பயணம் தொடங்கியது. சினிமாவில் வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும், அவருக்கு புகழ் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சா என விஜய்யை விமர்சித்தவர்கள் ஏராளம். அதையெல்லாம் நினைத்து துவண்டுவிடாமல் தன் தந்தை இயக்கத்தில் வரிசையாக சில படங்களில் நடித்தார். அப்படங்கள் விஜய்க்கு வெற்றியை தேடி தராவிட்டாலும் அவரை ஒரு நடிகராக மெருகேற்றியது.

Actor Vijay

பின்னர் படிப்படியாக ஆடியன்ஸின் பல்சை தெரிந்துகொண்ட விஜய், படிப்படியாக ஆக்‌ஷன் ரூட்டுக்கு திரும்பினார். 2002 முதல் 2010ம் ஆண்டுக்குள் வரிசையாக திருமலை, கில்லி, சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி என மாஸ் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமின்றி பேமிலி ஆடியன்ஸையும் தன்னுடைய நடனத்தால் கவர்ந்திழுத்தார் விஜய்.

இதையும் படியுங்கள்... Allu Arjun: அச்சுஅசல் அப்படியே இருக்கே! துபாயில் திறக்கப்பட்ட தனது மெழுகு சிலை பார்த்து மெர்சலான அல்லு அர்ஜுன்

Vijay Salary

தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வரும் விஜய், கடந்த மூன்று ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். அவர் முதன்முதலில் ரூ.100 கோடி சம்பளம் வாங்கிய படம் மாஸ்டர். அதன்பின்னர் பீஸ்ட் படத்திற்கும் அதே தொகையை வாங்கிய விஜய், அடுத்ததாக நடித்த வாரிசு படத்துக்கு ரூ.120 கோடி, கடைசியாக நடித்த லியோ படத்துக்கு ரூ.150 கோடியும் வாங்கி இருந்தார். தற்போது உருவாகி வரும் கோட் படத்துக்காக அவருக்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். இதுதவிர அவர் கைவசம் உள்ள தளபதி 69 படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறதாம்.

Vijay Net Worth

இப்படி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய்யின், சொத்து மதிப்பும் கடந்த சில ஆண்டுகளில் மளமளவென உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்படி நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அது மேலும் உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோலிவுட்டில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் தளபதி விஜய்.

இதையும் படியுங்கள்... Dhanush Salary : என்னது ஒரு படத்துக்கு 100 கோடியா...! சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய தனுஷ் - காரணம் என்ன?

click me!