Latest Videos

டிராபியை தொட்டு பார்த்த ஃபாப் டூ பிளெசிஸ் – கமெண்ட் அடித்த வர்ணனையாளர்கள்!

First Published May 22, 2024, 8:03 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டூபிளெசிஸ் டாஸ் போடும் நிகழ்வின் போது ஐபிஎல் டிராபியை தொட்டு, உற்று பார்த்ததைத் தொடர்ந்து தொடாதீங்க தொடாதீங்க என்று ஜியோ சினிமா வர்ணனையாளர் விமர்சித்துள்ளார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

அகமதாபாத் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின் போது ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூபிளெசிஸ் டிராபியை தொட்டு பார்த்தும், அதில் என்ன தெரிகிறது என்று உற்றும் பார்த்துள்ளார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

அப்போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணையாளர்கள் ஃபாப் தொடாதீங்க, தொடாதீங்க என்று கூறியுள்ளனர். டிராபியை கைப்பற்றுவதற்கு முன்னதாக டிராபியை தொடக் கூடாது. அப்படி டிராபியை தொட்டுவிட்டால் டிராபியை கிடைக்காது என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால் சாம்சன் மட்டும் எதுவும் செய்யாமல் அப்படியே இருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்த மைதானத்தில் 2ஆவது சேஸிங் செய்த அணியே அதிக போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பேட்டிங் செய்து தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த போட்டியில் நான் பவுலிங் தேர்வு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் காட்மோர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர், கேப்டன்), துருவ் ஜூரெல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஃபாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, யாஷ் தயாள், லாக்கி ஃபெகுசன், முகமது சிராஜ்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. இதுவரையில் 9 முறை பிளே ஆஃப் வந்துள்ள ராஜஸ்தான் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதே போன்று ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 1 4 முறை பிளே ஆஃப் வந்துள்ளது. இதில், 5 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 29 இன்னிங்ஸ் விளையாடிய கோலி 731 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113* ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று பந்து வீச்சில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 18 இன்னிங்ஸ் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

click me!