சென்னையில் கொட்டித்தீர்த்த கன மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இரவு நேரத்தில் சூறைக்காற்றோடு கன மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், ராமாவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பூந்தமல்லியில் 10 செ.மீ அளவிற்கும், சோழிங்கநல்லூர் 8 செ.மீ, செம்பரம்பாக்கம் 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.