tirumala tirupati
தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா பயணத்தை தமிக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம், திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும்.
திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா
திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது. ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார்.
பத்மாவதி அம்மன் தரிசனம்
மேலும் மதிய உணவுக்குபின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும்,
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைப்பேசி எண்களை (180042531111 (Toll free), 044-25333333 044-25333444) தொடர்பு கொண்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.