10 நிமிடத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான மொறு மொறு தோசை.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி கேட்பாங்க..

By Kalai SelviFirst Published Jun 18, 2024, 7:30 AM IST
Highlights

ஊட்டச்சத்து நிறைந்த கேரட்டில் சுவையான தோசை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தினமும் காலை அரிசி மாவில் இட்லியும், தோசையும் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. எனவே, அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்க கூடிய காலை உணவாக கொஞ்சம் வெரைட்டியாக தோசை வேண்டும் என்றால், சுவையான கேரட் தோசை செய்து சாப்பிடுங்கள். வெறும் 10 நிமிடத்தில் இந்த தோசை சுடலாம்.

கேரட்டில் மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், கண் பார்வையை அதிகரிக்கும், ஆற்றலை அதிகரிக்கும், எலும்புகளை உறுதியாக்கும் போன்ற பல நன்மைகளை வாரி வழங்கும். 

Latest Videos

முக்கியமாக, கேரட்டில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு ரொம்பவே நல்லது. இதய நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதில் பொட்டாசியம் இருப்பதால் அது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. கூடுதலாக, இதில் நார்ச்சத்தும் இருப்பதால் உங்கள் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதனால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது மற்றும் ஆரோக்கியமான எடையும் பராமரிக்கப்படுகிறது.

இந்த தோசையை உங்கள் வீட்டில் இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கேரட் தோசை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்..

இதையும் படிங்க:  Ragi Idli : ராகி இட்லியில் அப்படி என்னதான் சத்து இருக்கு; செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்துருவீங்க!!

கேரட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 2 கப்
உளுந்து - 1 கப்
கடலை பருப்பு - 4 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
துருவிய கேரட் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: காலையில சத்தான உணவு சாப்பிட விரும்பினால் ராகி மாவில் இந்த டிபன் செய்ங்க... டேஸ்டா இருக்கும்!

செய்முறை: 

  • கேரட் தோசை செய்ய முதலில் எடுத்து வைத்த அரிசி, உளுந்து, வெந்தயம், கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி, தண்ணீரில் சுமார் 5 மணி நேரம் ஊற வையுங்கள்.
  • அவை அனைத்தும் நன்றாக ஊறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த மாவை சுமார் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • அடுத்ததாக துருவிய கேரட்டை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இந்த கேரட் பேஸ்ட்டை அதில் சேர்த்து இதனுடன்  உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஏற்கனவே தயாரித்து வைத்த மாவை இதனுடன் ஊற்றி விட்டு, இதனுடன் நறுக்கி கொத்தமல்லியும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள்.  
  • இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட் மிக்ஸ் செய்த மாவை அதில் தோசை வடிவில் வட்டமாக ஊற்ற வேண்டும். தோசையை இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால் கேரட் தோசை ரெடி!
  • இந்த கேரட் தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!