Latest Videos

தெருவே மணக்கும் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு.. ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Jun 17, 2024, 3:19 PM IST
Highlights

இந்த பதிவில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

கருவாடு என்றாலே நம்மில் பலருக்கு மிகவும் பிடிக்கும். எந்த அளவிற்கு என்றால் மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு உங்களுக்கு செய்ய தெரியுமா..? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்... 

கருவாட்டு குழம்பு என்றாலே அதன் சுவையில் அலாதிதான். இதன் மனமும் அப்படியே நம்மை சுண்டி இழுக்கும். அதுவும் நல்லெண்ணையில் செய்யும் கருவாட்டு குழம்பு பற்றி சொல்லவே வேண்டாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார்.. இனி வீட்டிலும் செய்யலாம்... ரெசிபி இதோ!

கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கருவாடு
தக்காளி - 2 ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 15 பல்
புளி - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!

செய்முறை:

  • கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்ய முதலில், கருவாட்டை தண்ணீரில் நன்கு கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • இதனையடுத்து, ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், உளுந்தும் பருப்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  • கடுகு நன்கு புரிந்ததும் அதில், நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் மட்டும் போன்று ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், இப்போது அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், இப்போது அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி விடுங்கள்.
  • மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு, அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து ஒருமுறை கலந்துவிட்டுங்கள். பின் இதனுடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • இது ஒருப்பக்கம் இருக்க மறுபுறம்,  அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து, சூடானதும் அதில் கழுவி வைத்த கருவாடை போட்டு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • பிறகு, வதக்கிய இந்த கருவாடை 10 நிமிடம் கழித்து அந்த குழம்பில் எண்ணெய்யுடன் அப்படியே சேர்க்கவும்.  முக்கியமாக, கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால் ருசி பார்த்து உப்பு சேர்க்கவும். பிறகு குழந்தை ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். குழம்பில் எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவைகள் கிராமத்து ஸ்டைலில், கருவாட்டு குழம்பு ரெடி!!

கருவாடு நன்மைகள்:
கருவாடு உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது தெரியுமா..?  ஆம், சளி இருமல் உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும்.  அதுமட்டுமின்றி வாத கப நோய்களையும் கட்டுப்படுத்தும். கருவாட்டை அதிகளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். மேலும், கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்தும். இப்படி பல நன்மைகளைக் கொண்டுள்ளது கருவாடு. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!