எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் மதுமிதாவா இது? கவர்ச்சியில் புகுந்து விளையாடுறாங்களே!

First Published Apr 14, 2024, 9:45 AM IST

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ethirneechal Madhumitha

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக கலக்கி வருபவர் தான் மதுமிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான ஷானி என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார். இதையடுத்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் போன்ற தொடர்களில் நடித்தார் மதுமிதா.

serial actress Madhumitha

இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அந்த சீரியலில் மதுமிதாவின் நடிப்பு கவனம் பெற்றதால், அவரை அலேக்காக தூக்கியது சன் டிவி.

ethirneechal Madhumitha Photos

இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் கதையின் நயாகியாக நடிக்க கமிட் ஆனார் மதுமிதா. அந்த சீரியலில் ஆதிகுணசேகரனையே எதிர்க்கும் துணிச்சல் மிகுந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

இதையும் படியுங்கள்... அதிகாலையில் பரபரப்பு... நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் - பின்னணி என்ன?

ethirneechal Madhumitha Bali Trip Photos

எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்த சீரியல் இந்த அளவு ரீச் ஆவதற்கு அதன் திரைக்கதையும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பும் தான் காரணம்.

Madhumitha Bali Trip Photos

எதிர்நீச்சல் தொடரில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் மதுமிதாவுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது சுற்றுலா சென்றபோது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மதுமிதா.

serial actress Madhumitha Bali Trip Photos

அந்த வகையில் அண்மையில் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர், அங்கு கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்தபடி நடத்திய போட்டோஷூட்டை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் எதிர்நீச்சல் ஜனனியா இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். மதுமிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Siren OTT : தியேட்டரில் டல் அடித்த சைரன்... ஓடிடியில் சாதனை படைக்குமா? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

click me!