அடேங்கப்பா.. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published Mar 26, 2024, 2:35 PM IST

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தனது பிரமாணப் பத்திரத்தில் அசையும் சொத்து ரூ.526.53 கோடி எனவும் அசையா சொத்து ரூ.56.95 கோடி எனவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Aatral Ashokkumar

மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகனும் பாஜக ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் அசோக்குமார். ஆற்றல் எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் அசோக்குமார் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

Erode Lok Sabha AIADMK Candidates

இந்நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக்குமார் அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த பிரமாணப் பத்திரத்தில் ஆற்றல் அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

AIADMK

ஆற்றல் அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500-ம், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. ஆற்றல் அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இதேபோல் 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன.

Aatral Ashokkumar Net worth

எனவே ஆற்றல் அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளது. குறிப்பாக தனக்கு சொந்த வாகனம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அசோக்குமார், ரூ.12 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!