சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை! குளு குளு சூழலால் மனம் குளிர்ந்த மக்கள்!

First Published May 8, 2024, 8:40 AM IST

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Heatwave in Tamilnadu

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். 

Tamilnadu Rain

ஒருபுறம் வெயில் என்றால் மறுபுறம் அனல்காற்று நெருப்பாக வீசியது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க கோடை மழை எப்போது வரும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்து கிடந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. 

Chennai Rain

இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அசோக் நகர், அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, நந்தனம், ராமாபுரம், தாம்பரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!

Vilupuram Heavy Rain

அதேபோல் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் மற்றும் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,  காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம், சித்தலிங்கமடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.  கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அதிகாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!