விசிகவை நெருங்கும் அதிமுக? ஹலோ அண்ணே.. திருமாவுக்கு போன் போட்டு பாசத்தோடு நலம் விசாரித்த இபிஎஸ்..!

First Published Sep 27, 2023, 11:04 AM IST

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். 

thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னை வடபழினியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30ம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் தலைமை கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- விசிக தலைவர் திருமாவளவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!

இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமாவளவனிடம் நலம் விசாரித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி அதிமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருமாவளவனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளது அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. 

click me!