அட்டகத்தி ஆக தொடங்கி சினிமாவில் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் பா.இரஞ்சித் - அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published Dec 8, 2023, 8:44 AM IST

தங்கலான் படத்தின் இயக்குனர் பா இரஞ்சித்தின் சொத்து மதிப்பு மற்றும் அவரின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Pa Ranjith

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சென்னை 28 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். வித்தியாசமான கதையம்சத்தால் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பா.இரஞ்சித், அடுத்ததாக மெட்ராஸ் என்கிற தரமான படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றார்.

Rajinikanth, Pa Ranjith

மெட்ராஸ் படத்தை பார்த்து பிரம்மித்துப்போன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பா.இரஞ்சித் உடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டார். இதையடுத்து இவர்கள் கூட்டணியில் கபாலி என்கிற மாஸ் படம் உருவானது. ரஜினியை செம்ம ஸ்டைலிஷாக காட்டி ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பா.இரஞ்சித்துக்கு தன்னுடையை அடுத்த படமான காலாவையும் இயக்க வாய்ப்பளித்தார் ரஜினி. இப்படி அடுத்தடுத்து சூப்பர்ஸ்டாருக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குனராக உயர்ந்தார் பா.இரஞ்சித்.

Latest Videos


Director pa.ranjith

பா.இரஞ்சித் படங்கள் என்றாலே அதில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தனமாக பேசி இருப்பார். அப்படி அவர் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படமும் தமிழ் சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது. அதில் பாக்ஸிங்கில் உள்ள அரசியலை பேசி அசர வைத்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Pa Ranjith Birthday

சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படம் கே.ஜி.எப்-ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். 

Pa Ranjith Net Worth

இயக்குனர் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு ரூ.43 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு தரமான படங்களை கொடுத்து வருவதால், அதன்மூலமும் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... இந்த வருஷம் மிஸ் ஆயிடுச்சு.. No Problem 2024ல் பார்த்துக்கலாம் - 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 மூவிஸ்!

click me!