ஹாப்பி எண்டிங்; சூர்யா 45 முடிஞ்ச கையோடு அடுத்த படத்திற்கு செல்லும் RJ பாலாஜி - Viral Video!

Oct 31, 2024, 6:25 PM IST

பண்பலை தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி, இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. பிரபல இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

ஒரு மாறுபட்ட காதல் கதைகளத்தில் ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் பிரபல நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கின்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், தற்போது சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை விரைவில் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் அந்த திரைப்பட பணிகள் முடிந்த பிறகு, இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது ஹாப்பி எண்டிங் என்ற அந்த படத்திலிருந்து வெளியான டைட்டில் டீசர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.