ஸ்டைலிஷ் லுக்; மிட் ரேஞ்சு பட்ஜெட்டில் ஒரு புது Nexon காரை களமிறக்கும் டாடா - என்னெல்லாம் இருக்கு?

Ansgar R |  
Published : Oct 31, 2024, 10:48 PM IST

TATA Nexon : தனது CNG கார்களை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களிலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது டாடா நிறுவனம்.

PREV
14
ஸ்டைலிஷ் லுக்; மிட் ரேஞ்சு பட்ஜெட்டில் ஒரு புது Nexon காரை களமிறக்கும் டாடா - என்னெல்லாம் இருக்கு?
TATA Nexon Sunroof

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது சிஎன்ஜி மாடல் கார்களில் ஒரு அம்சத்தை ஏற்கனவே கொண்டுவந்த நிலையில், இப்பொது அதிரடியாக "பனோரமிக் சன்ரூஃப்" பொருத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் நெக்ஸானை அமைதியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் டாடா நெக்ஸான் இப்போது டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் + பிஎஸ் டிரிமில் பனோரமிக் சன்ரூஃப் வசதியை பெறுகிறது. அதே நேரத்தில் நெக்ஸான் சிஎன்ஜி இப்போது உயர்-ஸ்பெக் கிரியேட்டிவ் + பிஎஸ் டிரிமில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமா ரூ.40,000 தள்ளுபடி.. 5 ஆயிரம் இருக்கா.. ஹீரோ ஸ்கூட்டரை எடுத்துட்டு போங்க!

24
Nexon

மேலே குறிப்பிட்டுள்ளபடி, டாடா மோட்டார்ஸ் டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ் + பிஎஸ் டிரிமில் மட்டுமே இந்த அம்சத்தை வழங்குகிறது. இது பெட்ரோல்-எம்டி, பெட்ரோல்-டிசிடி, டீசல்-எம்டி மற்றும் டீசல்-ஏஎம்டி பவர்டிரெய்ன் வகை கார்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முழு அளவிலான சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியண்ட கார்கள், அசத்தலான 8-ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் ஒலி அமைப்பைப் பெறுகின்றன. மேலும் இந்த புதிய அம்சங்களை பெற்றுள்ள Nexon காரின் ஆரம்ப விலை ஃபியர்லெஸ் டிடியை விட சுமார் ரூ. 1.3 லட்சம் அதிகம்.

34
tata nexon interior

நெக்ஸான் சிஎன்ஜி டாடா நிறுவனத்தால் சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் அறிமுகத்தின் போது, ​​அது சிறந்த ஸ்பெக் ஃபியர்லெஸ் + எஸ் டிரிமில் பனோரமிக் சன்ரூஃப் உடன் வந்தது. இப்போது, ​​இந்த அம்சம் கிரியேட்டிவ் + பிஎஸ் மற்றும் கிரியேட்டிவ் + பிஎஸ் டிடி டிரிம்களில் கிடைப்பதால் ரூ. 1.8 லட்சம் விலை அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாடாவின் காம்பாக்ட் SUV மாடலாக தற்போது சிஎன்ஜி பவர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

44
TATA Nexon

டாடா nexon கார்களை பொறுத்தவரை அந்த CNG மாடலுக்கான விலை வெளியாகியுள்ளது. அதன்படி TATA Nexon Creative + PS காரின் விலை சுமார் 12.80 லட்சம் ரூபாயாகும். அதே போல TATA Nexon Creative + PS DT 13 லட்சத்திற்கும் இறுதியாக TATA Nexon Fearless PS DTயின் விலை சுமார் 14.60 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

இந்த தீபாவளியை மிஸ் பண்ணிடாதீங்க: ஹோண்டா ஆக்டிவாவில் ரூ.5000 கேஷ்பேக்

click me!

Recommended Stories