இந்த தீபாவளியை மிஸ் பண்ணிடாதீங்க: ஹோண்டா ஆக்டிவாவில் ரூ.5000 கேஷ்பேக்

First Published | Oct 31, 2024, 1:38 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் 125 ஸ்கூட்டர்களில் அசத்தலான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கூட்டர்களை மலிவு விலையில் வாங்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பொருட்கள், ஸ்கூட்டர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பல நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. தற்போது ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களில் அசத்தலான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் மால் மூலம் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இந்த சலுகையின் மூலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களை மலிவு விலையில் வாங்க முடியும்.

பஜாஜ் மாலில் EMI மூலம் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் 125 ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும். ரூ.5,000 கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த முன்பணம், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது.

Tap to resize

 இந்த தீபாவளிக்கு ஆக்டிவா ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தால், இந்த சலுகை சிறந்தது. ஏனெனில் ஸ்கூட்டரின் மொத்த விலையில் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும். பஜாஜ் மால் வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்தால் இந்த கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இதன் மூலம் ஸ்கூட்டர் வாங்கும் கனவை நனவாக்கலாம். குறிப்பாக இரண்டு ஸ்கூட்டர்களிலும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. 

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.79,935. ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.89,422. 6ஜி ஸ்கூட்டரில் 109.51 சிசி என்ஜின் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47 கிமீ மைலேஜ் தரும்.  5.3 எரிபொருள் திறன் கொண்டது. 7.73 bhp பவர் கொண்ட ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ.

ஹோண்டா 125 ஸ்கூட்டரில் 124 சிசி என்ஜின் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47 கிமீ மைலேஜ் தரும். 8.19 bhp பவர் கொண்டது.  BS6 எமிஷன் என்ஜின் சிறந்த சாலை பிடிப்பு மற்றும் வசதியான பயணத்தை வழங்குகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா முன்னணியில் உள்ளது.

Latest Videos

click me!