
KKR Released Shreyas Iyer in IPL 2025 Retention: ஐபிஎல் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2025 தொடருக்காக ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் தொடர விடாமல் விடுவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைப்பு பட்டியலில் சிக்ஸர் மன்னன் ரிங்கு சிங்கிற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2025 தொடருக்காக தக்க வைத்துக் கொண்ட மற்றும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தனது மூன்றாவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை வென்றது. அணியை மூன்றாவது ஐபிஎல் பட்டம் வரை வழிநடத்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை தக்க வைத்துக் கொள்ளாமல் விடுவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) தக்க வைத்துக் கொண்ட வீரர்களில் இந்திய இளம் வீரர் ரிங்கு சிங்கிற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங் உடன் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமணதீப் சிங் ஆகியோர் கொல்கத்தா அணியின் தக்கவைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஏலத்திற்கு முன்பு கேகேஆர் மொத்தம் 6 தக்கவைப்பு இடங்களை நிரப்பியுள்ளது.
கேகேஆர் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ரீங்கு சிங்கிற்கு முதலிடம் அளித்து ரூ. 13 கோடியுடன் தக்க வைத்துக் கொள்வது பேசுபொருளாக உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் தக்கவைப்பு பட்டியலில் விடுவித்த பிறகு ரிங்கு கேப்டன் பந்தயத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்திய லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி உடன் மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை தலா ரூ. 12 கோடிக்கு அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹர்ஷித் ராணா, ரமண்தீப் சிங் ஆகியோரை 4 கோடி ரூபாயுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது கேகேஆர். முந்தைய சீசன்களில் டெல்லி கேபிடல்ஸிலிருந்து வெளியேறிய பிறகு 2022 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்தது.
2022, 2024 ஐபிஎல் சீசன்களில் கேகேஆர் அணிக்கு ஐயர் கேப்டனாக இருந்தார். 2023 இல் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் நைட் ரைடர்ஸுக்கு நிதிஷ் ராணா தலைமை தாங்கினார். இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே பிற அணிகளிடமிருந்து கேப்டன்சி சலுகைகளைப் பெற்றுள்ளதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. மெகா ஏலத்திற்கு முன்பே அவரிடமிருந்து ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவை குறிப்பிடுகின்றன.
கடந்த சீசனில் சாதனை அளவாக ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கேகேஆர் விடுவித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவராக மிட்செல் ஸ்டார்க் வரலாறு படைத்தது அனைவரும் அறிந்ததே. மொத்தம் ஆறு இடங்களை நிரப்பியதன் மூலம் கேகேஆர் மொத்தம் 120 கோடி ரூபாய் தக்கவைப்பு நிதியில் மெகா ஏலத்திற்கு முன்பு மொத்தம் 57 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் கேகேஆருக்காக அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடும் சுனில் நரைனை கேகேஆர் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்த வீரர்களின் பட்டியல்:
ரிங்கு சிங்: ரூ. 13 கோடி
வருண் சக்கரவர்த்தி: ரூ. 12 கோடி
சுனில் நரைன்: ரூ. 12 கோடி
ஆண்ட்ரே ரஸ்ஸல்: ரூ. 12 கோடி
ஹர்ஷித் ராணா: ரூ. 4 கோடி
ரமணதீப் சிங்: ரூ. 4 கோடி
இந்த 6 வீரர்களுக்காக கேகேஆர் ரூ.57 கோடியை செலவு செய்துள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு கேகேஆர் ரூ.63 கோடியை கையில் வைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேகேஆர் விடுவித்த வீரர்களின் பட்டியல்
ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஃபில் சால்ட், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், வைபவ் அரோரா, KS பாரத், சேதன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, அல்லா கஜன்ஃபர், துஷ்மந்த சமீரா, சகிப் ஹுசைன், ஜேசன் ராய், குஸ் அட்கின்சன், முஜீப் உர் ரஹ்மான்