
IPL 2025 Retentions 10 Teams Retained Players List: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பரபரப்பாக பேசப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் 2025 மெகா ஏலம். இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர், இயக்குநர்கள், ஆலோசகர்கள் என்று ஒவ்வொரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்படும் நிலையில் தற்போது அணியிலும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் 10 அணிகளில் தற்போது வரையில் வெளியான தகவல்களின்படி தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் பற்றி பார்க்கலாம் வாங்க. முதலில் 5 முறை டிராபி கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி இடம் பெற்றுள்ளார். அவர் அன்கேப்டு வீரராக ரூ.4 கோடிக்கு இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தோனி தவிர கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ்:
6 முறை டிராபி வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் என்றால் அது ரோகித் சர்மா. அவர் எந்த அணிக்காக விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவிக்கவில்லை. தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். ஆனால், அவர் கேப்டன் இல்லை. வழக்கம் போன்று ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக தக்க வைக்கப்பட்டுள்ளார். மேலும், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, நமன் திர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3ஆவது முறையாக சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தவிர ஆண்ட்ரே ரஸல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தக்க வைக்கப்படவில்லை. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐபிஎல் 2025க்கான தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ரிங்கு சிங், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
2016 ஆம் ஆண்டு டிராபி கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. இந்த சீசனில் பல சாதனைகள் படைத்த ஐபிஎல் அணிகளில் ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் இந்த சீசனில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் ஹென்ரிச் கிளாசென் ரூ.23 கோடி, பேட் கம்மின்ஸ் ரூ.18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ.14 கோடி மற்றும் நிதிஷ் ரெட்டி ரூ.6 கோடி என்று தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு மட்டும் ரூ.75 கோடி செலவிட்ட நிலையில் எஞ்சிய ரூ.45 கோடியை ஏலத்திற்கு பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ்:
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது ரிஷப் பண்ட் தான். டெல்லி கேபிடல்ஸ் அணியில் நிர்வாகம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்:
ஆர்சிபி போன்று ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத அணிகளின் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இருக்கிறது. இதில் அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங், பிராப்சிம்ரன் சிங் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டுமே ரூ.112 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
லக்னோ அணியைப் பொறுத்த வரையில் கேஎல் ராகுலுக்கு அந்த அணியில் நீடிக்க விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் லக்னோ ரூ.20 கோடிக்கு நிக்கோலஸ் பூரனை தக்க வைக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
லக்னோ அணியைப் பொறுத்த வரையில் கேஎல் ராகுலுக்கு அந்த அணியில் நீடிக்க விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் லக்னோ ரூ.20 கோடிக்கு நிக்கோலஸ் பூரனை தக்க வைக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ்:
தற்போது ஜிடி அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் குறைந்த தொகைக்கு தன்னை தக்க வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனினும் மற்ற வீரர்கள் யாரெல்லாம் தக்க வைக்கப்படுவார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தக்க வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜோஸ் பட்லர் ஆர்டிஎம் கார்டு மூலமாக எண்ட்ரி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.