ஆளவிட்டா போதுமுன்னு லக்னோவிலிருந்து விலகும் கேஎல் ராகுல் – ஆர்சியில் இணைய திட்டம்?

First Published Oct 31, 2024, 1:42 PM IST

KL Rahul leave From LSG: தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற பிறகு, புதிய விக்கெட் கீப்பரைத் தேடி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore). இந்த நிலையில் கேஎல் ராகுல் ஆர்சிபியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Zaheer Khan, KL Rahul, LSG, IPL 2025, IPL 2025 Auction, IPL 2025 Retention

KL Rahul leave From LSG: தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற பிறகு, புதிய விக்கெட் கீப்பரைத் தேடி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore). இப்போது அவர்களின் பார்வை லோகேஷ் ராகுல் (KL Rahul) பக்கம் திரும்பியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை விடுவிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் ராகுல் மீது பெங்களூரு அணிக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஏலத்திற்கு முன்பு அவரை அணியில் சேர்க்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

KL Rahul LSG Retained Players

இன்று அக்டோபர் 31ஆம் தேதி, எந்தெந்த வீரர்களை ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதை ஐபிஎல் அணிகள் அறிவிக்க வேண்டும். லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் இருந்தார். ஆனால் அவரைப் பற்றி அணி நிர்வாகம் அவ்வளவு திருப்தி அடையவில்லை. அணியின் வழிகாட்டியாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சேர்ந்துள்ளார். அவரும் ராகுலை அணியில் வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

Latest Videos


KL Rahul, IPL 2025, Indian Premier League, IPL 2025 Auction

இந்த சூழ்நிலையில், ராகுலை லக்னோ அணி விடுவித்தால், அவரை அணியில் சேர்க்க பெங்களூரு முயற்சி செய்யலாம். ஆர்சிபியின் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக் கடந்த சீசனுடன் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு ஒரு விக்கெட் கீப்பர் தேவை. ராகுலின் ஐபிஎல் அறிமுகம் பெங்களூரு அணியில்தான். எனவே, அந்த அணிக்கே மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ராகுல் பெங்களூருவுக்குத் திரும்புவார் என்ற ஊகங்களை ஒரு வீடியோ பதிவு மேலும் அதிகரித்துள்ளது. அந்த வீடியோவில், ராகுல் மட்டுமே ஆர்சிபி வீரர் அல்லாதவர்.

IPL 2025 Retentions, IPL 2025, Lucknow Super Giants

திடீரென்று இப்படி ஒரு பதிவு வெளியான பிறகு, ராகுல் பெங்களூரு அணிக்குத் திரும்புவார் என்ற ஊகங்கள் அதிகரித்துள்ளன. ஏலத்திற்கு முன்பு அவரை அணியில் சேர்க்க முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் ஏலத்தில் ராகுலை வாங்க பெங்களூரு முயற்சி செய்யலாம். ராகுல் அணிக்கு வந்தால், விக்கெட் கீப்பருடன் ஒரு தொடக்க ஆட்டக்காரரையும் பெறும்.

KL Rahul, IPL 2025, LSG Released KL Rahul ahead of IPL 2025 auction

ஃபாஃப் டு பிளெசிஸுக்குப் பதிலாக அவர் களமிறங்கலாம். அதேபோல், அணிக்கு கேப்டனாகவும் செயல்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விராட் கோலி மீண்டும் கேப்டனாகத் திரும்ப வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆர்சிபி அணியைப் பொறுத்த வரையில் விராட் கோலி, யாஷ் தயாள் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் மட்டுமே தக்க வைப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. எனினும் உறுதி செய்யப்படவில்லை.

LSG Retained Players, IPL 2025, IPL 2025 Retentions

இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ.20 கோடிக்கு நிக்கோலஸ் பூரன் தக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லக்னோ அணியில் ரவி பிஷ்னோய், மாயங்க் யாதவ் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லக்னோ அணியிலிருந்து வெளியேறும் கேஎல் ராகுலுக்கு ஆர்சிபி, சிஎஸ்கே, ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.

click me!