IPL 2025, CSK Retained Players
IPL 2025 CSK Retained Players: ஐபிஎல் அணிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எந்த வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை அணி தக்கவைப்பு பட்டியலை உறுதிப்படுத்தியுள்ளது.
CSK, IPL 2025 Retained Players
ஐபிஎல் தக்கவைப்பு பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி தேதி நெருங்கி வருவதால், எந்த அணி எந்த வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், தங்கள் தக்கவைப்பு பற்றிய தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. எக்ஸ் தளத்தில் தங்கள் ரசிகர்களை மெகா ஏலத்திற்கு முன்பு அவர்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது
எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே செய்த பதிவில் 5 வீரர்களின் சிறப்பு எமோஜிகளையும் பகிர்ந்துள்ளது. இந்தப் பதிவில் பெயர்களைக் குறிப்பிட்டு, சிஎஸ்கே அணியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹெலிகாப்டர், கிவி பழம், ராக்கெட் போன்ற எமோஜிகள் எம்எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரானா போன்ற வீரர்களின் பெயர்களைக் குறிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
CSK IPL 2025 Retained Players, IPL 2025, IPL 2025 Auctions
எப்படியிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் சீசனில் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தோனி பேசுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன்' என்று கூறினார். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு கேப்டன் பதவியை ஒப்படைத்து, கீழ் வரிசையில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைப்பு இறுதிப் பட்டியல் இதோ
சென்னை சூப்பர் கிங்ஸ் வரும் ஐபிஎல் சீசனுக்காக தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐந்து தக்கவைப்புகளை இறுதி செய்துள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா ஆகியோர் உள்ளனர்.
CSK, IPL 2025 Retained Players, Chennai Super Kings
இந்தப் பட்டியலில் இடம்பெறாத ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே போன்ற நட்சத்திர வீரர்களை சிஎஸ்கே விடுவிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஐந்து தக்கவைப்புகளுக்கு மொத்தம் ரூ.120 கோடி பர்ஸில் இருந்து குறைந்தது ரூ.65 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. தோனியை அன்-கேப்ட் வீரராகத் தொடர வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான அணியாக முன்னெடுத்துச் சென்ற தலைவராக எம்எஸ் தோனி சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளார். ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்த தோனி, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஐபிஎல் 2025ல் விளையாட உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, தோனியை சென்னை அணி ரூ.12 கோடிக்குத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், தற்போது இந்த மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் ரூ.4 கோடிக்குத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் விதிமுறைகளின்படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய அணிக்காக விளையாடவில்லை என்றால், 'அன்-கேப்ட் வீரர்' என்று கருதப்படுவார்.
IPL 2025, CSK, IPL 2025 Auctions, CSK Retained Players
கேஎல் ராகுல் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் கண்
கேஎல் ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இதனால், அவரை வரும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் திட்டமிட்டு வருகின்றன. நம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் கேஎல் ராகுலை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
32 வயதான கேஎல் ராகுலை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) உட்பட மேலும் மூன்று முன்னாள் சாம்பியன்களும் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்சிபி உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகிய அணிகளும் கேஎல் ராகுல் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.