டாப் 3ல் இடம் பிடித்த சிவகார்த்திகேயன்; மாஸ் காட்டிய அமரன் - தமிழகத்தில் இன்று வசூல் எவ்வளவு?

First Published | Oct 31, 2024, 10:18 PM IST

Amaran Box Office : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த சிலர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Amaran Box Office

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான "ரங்கூன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இயக்குனர் தான் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகி இன்று தீபாவளி ரேஸில் களமிறங்கிய திரைப்படம் தான், பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் "அமரன்" என்கின்ற திரைப்படம். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கி உள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி நடித்து அசத்தியிருக்கிறார்.

நிறையா பேசாதீங்க; செயலில் காட்டுங்க - த.வெ.க தலைவர் விஜய்க்கு அறிவுரை சொன்ன நமீதா!

Sai Pallavi

இப்பொழுது தமிழ் சினிமாவை பொறுத்தவரை "சின்ன தளபதி" என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் சிவகார்த்திகேயன், கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மெல்ல மெல்ல கோலிவுட்டின் டாப் நடிகராக அவர் மாறிவரும் நிலையில், அவருடைய திரைப்படங்கள் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் முதல் முறையாக பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த "அமரன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Sivakarthikeyan

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அயலான் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை கொடுக்காத நிலையில், இந்த அமரன் திரைப்படம் உச்சகட்ட வரவேற்பை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். அதுமட்டுமல்ல இந்த 2024 ஆம் ஆண்டு, தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய டாப் 3 படங்களில் மூன்றாவது இடத்தை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பிடித்திருக்கிறது என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜயின் கோட் படம், தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 29.5 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் முதல் நாள் வசூலாக தமிழகத்தில் 20.50 கோடி ரூபாய் வசூல் செய்தது.

Sivakarthikeyan amaran

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன் தமிழக அளவில் முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு கமலின் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது ஆனால் அந்த திரைப்படம் முதல் நாளில் தமிழக அளவில் 13 கோடிகளை மட்டுமே வசூல் செய்த நிலையில் தற்பொழுது டாப் 3 பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்திருக்கிறார். தொடர்ச்சியாக அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் நிச்சயம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் எளிதாக இந்த திரைப்படம் நுழைந்து விடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

"அடிக்கடி குத்திக்காட்டும் சுனிதா"; ஓரம்கட்டப்படுவதாக அழுது புலம்பும் ஜாக்குலின் - என்ன ஆச்சு?

Latest Videos

click me!