முன்னாள் கணவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினாரா நடிகை சமந்தா? திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Samantha Ruth Prabhu : பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் சமந்தா, கடந்த 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

Samantha

தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் தான் சமந்தா. சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த இவர், இன்று இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல. 2010ம் ஆண்டு "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படம் வெளியான பிறகு, தெலுங்கு மொழியில் அதே திரைப்படத்தை ரீமேக் செய்தார் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நாக சைதன்யாவோடு இணைந்து நாயகியாக நடித்து தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார் சமந்தா. 

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த நடிகையாக அவர் வலம்வந்து கொண்டிருக்கிறார். திரைத்துறையில் களமிறங்குவதற்கு முன்பாக அவர் மாடலிங் துறையில் பயணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ மாதிரி தான்பா இருக்காரு; களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம் - காதலருடன் ரம்யா பாண்டியன்!

Samantha Marriage

கடந்த 2017 ஆம் ஆண்டு, சுமார் ஏழு ஆண்டுகளாக தான் காதலித்து வந்த பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து சுமந்தா திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சூழலில், சுமார் 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு நடிகை சமந்தாவை சட்டப்படி விவாகரத்து செய்தார் பிரபல நடிகர் நாக சைதன்யா. அதன்பிறகு உடல் அளவிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சமந்தா, கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் திரையுலகில் நல்ல பல படங்களில் நடிப்பதோடு, ஒரு புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கி இருக்கிறார்.


Samantha Divorce

நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமணத்திற்கு முன்பு ஒரு பிளாட் ஒன்றை வாங்கினார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த வீட்டினை வடிவமைத்து உருவாக்கினர். உண்மையில் அது அவர்களது கனவு வீடாகவே இருந்தது என்றே கூறலாம். ஆனால் இந்த பிளாட் வாங்கும் போது, நாக சைதன்யாவை விட சமந்தா தான் அதிகம் செலவு செய்ததாக சில இடங்களில் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து, அதன் பிறகு நாக சைதன்யாவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Samantha and naga chaitanya

சோபிதாவுடனான திருமணத்திற்கு பிறகு, அந்த பிளாட்டில் தான் குடியேற இருப்பதாக நாக சைதன்யா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முடிவிற்கு ஷோபிதா சம்மதிக்கவில்லை என்றும். அதில் தங்குவதன் மூலம், முன்னாள் மனைவியின் நினைவுகளை திரும்பத் திரும்ப வரும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பிளாட்டில் யாரும் இல்லை என்றும், அதை விரைவில் சோபிதாவிற்கு, சைதன்யா பரிசளிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சமந்தா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இதில் விரைவில் பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் சல்யூட்: அமரன் படத்தை ஆஹா ஓஹோனு புகழந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Latest Videos

click me!