ஹீரோ மாதிரி தான்பா இருக்காரு; களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம் - காதலருடன் ரம்யா பாண்டியன்!

First Published | Oct 31, 2024, 3:49 PM IST

Ramya Pandian : லோவெல் தவான் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் பிரபல நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandia Lover

தான் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலமாக தமிழக அளவில் பெரிய அளவில் பிரபலமடைந்து. தற்பொழுது சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் கலக்கி வரும் ஒரு நாயகி தான் ரம்யா பாண்டியன். பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் அருண் பாண்டியனின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகில் இயக்குனராக பயணித்து வந்த துரை பாண்டியனின் மகள் தான் ரம்யா பாண்டியன். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த இவர், இளம் வயதிலிருந்து தன்னுடைய குடும்பத்தின் மூலமாக திரையுலகோடு மிக நெருக்கமாக இருந்து வந்தார். அதன் பிறகு மாடலிங் துறையிலும் பயணித்து வந்தார். இந்த சூழலில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "டம்மி டப்பாசு" என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். இன்று நல்ல பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

பிக் சல்யூட்: அமரன் படத்தை ஆஹா ஓஹோனு புகழந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ramya pandian

2015ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் கலை உலகில் அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில், ராஜ் முருகன் இயக்கத்தில் வெளியான "ஜோக்கர்" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு "ஆண் தேவதை", "ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும்" மற்றும் "நண்பகல் நேரத்து மயக்கம்" உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில் நண்பகல் நேரத்து மயக்கம் என்பது அவர் முதல் முதலில் நடித்த மலையாள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்று மூன்றாவது போட்டியாளராக இவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

actress ramya pandian

தொடர்ச்சியாக பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் குறும்படங்களிலும் இணைய தொடர்களிலும் இவர் வெற்றிகரமான நாயகியாக பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது "இடும்பன்காரி" என்கின்ற திரைப்படம் இவருடைய நடிப்பில் உருவாகி வருகிறது. தற்பொழுது 34 வயதுடைய நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி பிறந்தவர். தொடர்ச்சியாக திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு தான் தன்னுடைய காதலர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். லோவல் தவான் என்பவரை தான் அவர் காதலித்து வருகின்றார். வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடக்கவிருக்கிறது. அன்றைய தினம் ரம்யா பாண்டியன் மற்றும் தவான் ஆகிய இருவருக்கும் நிச்சயம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ramya pandian lovel

பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரியும், பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியன் தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த நடிகர் வலம் வந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி பிரபல நடிகர் அசோக் செல்வனை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் விரைவில் ரம்யா பாண்டியனுக்கும் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டையனுக்கு குறி வச்ச அமேசான் பிரைம்.! ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளியான தேதி

Latest Videos

click me!