வேட்டையனுக்கு குறி வச்ச அமேசான் பிரைம்.! ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளியான தேதி

First Published | Oct 31, 2024, 11:08 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Rajinikanth, Vettaiyan, OTT release date

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் கேட்கவா வேண்டும், தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பட்டைய கிளப்பும். அந்த வகையில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் தொடர்பாக சரவெடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

Actor Rajinikanth Vettaiyan Kerala collection report out

இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினி படத்தை போல் கொண்டாடினர். இதனையடுத்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து ஜெய்பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Tap to resize

Vettaiyan

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடத்திருந்தனர். போலி என்கவுன்டர் தொடர்பாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக அமைந்தது. வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில்,  மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்தது. 

Actor Rajinikanths Vettaiyan film ott update out

இதனையடுத்து திரையரங்கில் தனது வசூல் வேட்டையை வேட்டையன் திரைப்படம் முடித்துள்ளது. படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி  வேட்டையன் படத்தின் இறுதி வசூல் ரூ. 265 கோடி எனவும் தமிழ்நாட்டில் ரூ. 104 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி வெளியாகியுள்ளது. அந்த வகையில் அமேசான் பிரைமில் வருகிற நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!